ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் மனித உரிமைகள் நாள் கொண்டாடப்படுகிறது. கலாச் சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. திராவிடர் கழகம் என்பது அடிப்படை யில் மனித உரிமை இயக்கம். இந்தியச் சமூகம் என்பது வேற்றுமையில் ஒற் றுமை காணும் வண்ணம் அமைந்துள் ளது. ஆனால் ஒரு திராவிட மொழி யைப் பேசும் மக்களுக்கு வாய்ப்பாக வும், ஒரு குறிப்பிட்ட இனம் தங்கள் விகிதத்திற்கு மேல் ஆதிக்கத்தை அனுபவிக்கவும் வாய்ப்பாக உள்ளது. திராவிடர்களின் கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பண்பாட்டு வளர்ச்சி என்னும் தடத்தில் திராவிடர் கழகத் தின் தாக்கம் மிகையானது சமூக நீதிக் கோட்பாட்டை நோக்கி வியூகங்களை அமைத்து இடஒதுக்கீடு எனும் வாய்ப் பின் மூலமாகத் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமை கிட்டிட திராவிடர் கழகத்தின் பங்க ளிப்பு அதிகம். சாதி ஒழிப்பு, பெண்ண டிமை ஒழிப்பு, சமதர்ம வாய்ப்பு, அனைத்துவித ஒடுக்குமுறையிலிருந் தும் விடுதலை வழிபாட்டு உரிமை என மனித உரிமையின் மாண்பினைக் காத்திட திராவிடர் கழகம் மகத்தான சாதனை புரிந்துள்ளது.
கொள்கையைப் பரப்புதல் மற்றும் போராட்டம் வழியே மக்களிடையே மனித உரிமை கோட்பாட்டுக்குத் திராவிடர் கழகம் ஆற்றியிருக்கிற பங்கும் பணியும் அதிகம்.
உலகில் குற்றம் சுமத்தப்பட்ட குமுகாய வழக்கங்களின் வரலாற்றை குஜராத்தைச் சேர்ந்த மனித உரிமை போராளி லலித் பார்மர் தமது நூலில் விளக்குகிறார்.
அதுபோல குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தி ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களின் விடுதலைக்குத் திராவிடர் இயக்கம் பாடுபட்டது. மனித உரிமைகளைத் தாக்கி அழிக்கும் காரணிகளை அடையாளப்படுத் தினார் லலித் பார்மர் இந்தியச் சமூகத் தில் மனித உரிமைகளை நசுக்கி அடக் கியும் ஒடுக்கியும் வைத்திருந்த ஆதிக் கச் தியினருக்கு எதிராகத் திராவிடர் கழகம் போராடி வெற்றிபெற்றது. மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்தும், பாதுகாப்பதற்குத் தடுப்பு அரண்கள் எவை எவை என்றும், லலித் பார்மர் பட்டியவிடுகிறார்.
தந்தை பெரியாரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் திராவிடர் கழகத்தின் பணிகளின் வழி அயராது பாடுபட்டும், போராடியும், ஈகங்கள் செய்தும் படிநிலை வளர்ச்சி யினை மனித உரிமைகளின் அனைத் துத் தடங்களிலும் இந்நாட்டில் ஏற்படுத் தினர் என்பதைப் பார்மர் நூலின் கருத் தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலையளவு பணியென வியக்க வைக்கிறது.
மனித உரிமை எனும் கருத்து உலக அளவில் இன்று பெரிதாக, பரவலாகப் பேசப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் உரிமைப் பறிப்பு என்பது நிகழ்ந்தேயுள்ளது.
அதுபோன்றே நம் நாட்டிலும் மனித உரிமை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மறுக்கப்பட்டு, எண்ணில டங்காத மக்கள் வாழ்விழந்து கிடந்த நிலையை மாற்றி வாழ்வுரிமை பெற்ற வர்களாக மாறிட திராவிடர் கழகம் பணிகள் பல செய்துள்ளது.
தீண்டாமை கொடுமையிலிருந்து விடுதலை பெற சாதி ஒழிப்பு பிரச்சார போராட்டம் நடத்திய விதம், அடி மைத்தனத்திலிருந்து மீட்பு, ஆணுக்குரிய உரிமைகள் பெண்களுக் கும் கிடைத்திட பாடுபட்ட தன்மை, ஒடுக்கப்பட்டோ வாழ்வில் உயர்வு பெற கல்வி வேலைவாய்ப்பு கிடைத் திட வகுப்புரிமை தேவை எனப் போரா டிய திறன். அறியாமை, மூடத்தனங் களிலிருந்து விடுபட்டு சிந்தனைச் சுதந் திரம் கிடைத்திடச் செய்ய ஆற்றிய சேவை இப்படியாக திராவிடர் கழ கம் மனித உரிமைக்கு என ஆற்றியிருக்கக் கூடிய தொண்டடை பறைச் சாற்றுவோம்.
- ழகரன்
No comments:
Post a Comment