ஒரு வரலாற்று ஆவணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

ஒரு வரலாற்று ஆவணம்

பொ.நாகராஜன்

சென்னை.

* தமிழகத்தின் கடந்த நூறாண்டுகள் வரலாற்றை அறிவதற்கு, திராவிட இயக்கத் தின் வரலாற்றை படித்தாலே போதுமானது. ஏனெனில் திராவிட இயக்கத்தின் வரலாறு, நூறாண்டுகளுக்கும் முன்பே துவங்கி விட்டது! சமூகநீதி வரலாற்றை, ஆதாரங்க ளோடு ஆவணப்படுத்தி தரப்பட்டதுதான், இரண்டு தொகுதிகளை கொண்ட இந்த நூல். 


திராவிடர் கழக வரலாறு (இரண்டு தொகுதிகள்) - கி.வீரமணி 
- திராவிடர் கழக வெளியீடு - பக்கங்கள் 720 - விலை ரூ. 700.

* டாக்டர் சி. நடேசன் மற்றும் பார்ப்பன ரல்லாத பிரமுகர்கள் இணைந்து, சென்னை அய்க்கிய கழகத்தை 1913இல் சென்னை திராவிட சங்கம் என பெயர் சூட்டினார்கள். சென்னையில் பார்ப்பனரல்லாத மாணவர் களுக்கு விடுதியொன்று - 1914இல் திராவிட இல்லம் துவங்கப்பட்டது. தொடக்கத்தில் திராவிட இயக்கம் இப்படித்தான் கருவாகி, உருவாகி, உயிர்பெற்று, உயரம் தொட்டது!

* சென்னை எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் ஒன்று நடந்தது. பார்ப்பனரல்லாத தலைவர்களும், பிரமுகர்களும் ஒன்று கூடி, வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை அடைய வேண்டி 20.11.1916 அன்று, ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு தென்னிந்திய நலவுரி மைச் சங்கம் என பெயர் சூட்டினார்கள்.

* அதில் கலந்து கொண்ட தலைவர் களில் சிலரின் பெயரை அறியும் போது, அந்த அத்தனை தலைவர்கள் பெயரும் நமக்கு பரிச்சயமான இடத்தின் பெயரோ, சாலையின் பெயரோ, பூங்காவின் பெயரோ அல்லது அரசு கட்டடத்தின் பெயரோ சூட்டப்பட்டு இருப்பது, வரலாற்றை நினைவு கொள்ள செய்யப்பட்ட சிறந்த காரியம் என மகிழ முடிகின்றது.

*   தென்னிந்திய நலவுரிமை சங்கம் சார்பில் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில நாளேடும் திராவிடன் என்ற தமிழ் நாளேடும் வெளிவந்தது. ஜஸ்டிஸ் என்ற பெயராலேயே அந்த இயக்கத்திற்கு நீதி க்கட்சி என்ற பெயர் வந்தது!

சென்னை மாகாண சபைக்கு, இரட்டை ஆட்சி முறை அடிப்படையில், முதன்முறையாக 1919இல் தேர்தல் நடந்தது. நீதிக்கட்சி அதிக இடங்களை பெற்று முன்னிலையில் இருந்தது. முதலாவது மாகாண சுயாட்சி சட்டமன்ற கூட்டம் 12.11.1921இல் துவங்கப்பட்டது. முதலாவது சென்னை மாகாண முதலமைச்சராக, வழக் குரைஞர் கடலூர் . சுப்பராயுலு செட்டியார் ஆட்சியில் அமர்ந்தார். நீதிக்கட்சி 1921 முதல் 1937ம் ஆண்டு வரை தமிழ்நாட்டை 17 ஆண்டுகள் ஆட்சி செய்தது.

* நீதிக்கட்சியின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை எதுவென்றால், 13.09.1928 அன்று, அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் கொண்டு வந்து நிறைவேற்றிய, வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை அல்லது கம்யூனல் ஜி.. என்ற புரட்சிகரமான சமூகநீதி திட்ட மாகும்!  தந்தை பெரியார் 1919ஆம் ஆண்டு முதல் 1925ஆம் ஆண்டு வரை காங்கிரசில் பிரமுகராகவும், மாகாண காங்கிரசின் தலைவராகவும் இருந்தார்.

பெரியார், சேரன் மாதேவி குருகுலப் போராட்டத்திலும்  வைக்கம் போராட்டத் திலும் பங்காற்றி காங்கிரசின் வர்ணாசிரம ஆதரவு நிலைப்பாட்டை அறிந்து மனம் கொதித்ததாலும்,  வகுப்புவாரி பிரதிநிதித்து வத்துக்கு எதிரான காங்கிரஸ் போக்கு கண்டு மனம் வேதனையடைந்ததாலும், காங்கி ரசை விட்டு 1925 நவம்பரில் வெளியேறினார்.

* பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். செங்கல் பட்டில் முதலாவது சுயமரியாதை மாகாண மாநாடு 1929இல் நடைபெற்றது. பின்பு பெரியாரின் தொடர்ந்த சுயமரியாதை மாநாடுகள், மலேசிய பயணம், ஆசிய அய் ரோப்பிய நாடுகளில் பயணம், சோவியத் ரஷ்யாவில் அதிக காலம் தங்கி ஆய்வு செய் தது, தமிழகம் திரும்பிய பின்  சுயமரியாதை சமதர்ம இயக்கத்தை துவக்கியது என பல வரலாற்று நிகழ்வுகள் நடந்து முடிந்தன.

* ராஜாஜி தமிழக முதல்வராக 1937இல் பதவிக்கு வந்த பின்பு இந்தி மொழி திணிப்பை கையிலெடுத்தார். முதலாவது இந்தி மொழி திணிப்பு போராட்டத்தை பெரியார் கையிலெடுத்தார். பெரியார் சிறை யிலடைக்கப் பட்டார்.

சென்னையில் 13.11.1938 அன்று நடை பெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில், அய்யா .வெ.ராமசாமிக்கு - பெரியார் என்ற பட்டத்தை தமிழக வீராங்கனைகள் வழங்கி, வரலாற்றில் நீங்காத பட்டமாகவும், பாடமாகவும் இடம் பெற செய்தார்கள்.

* நீதிக்கட்சி மாநாடு 1938 டிசம்பரில் நடந்த போது, இந்தி எதிர்ப்பு போரில் பங்கு பெற்றதால், பெல்லாரி சிறையில் கைதியாகி யிருந்த தந்தை பெரியாரை, நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். அதன் பின்னே சுயமரியாதை இயக்கத்தில் நீதிக் கட்சி இணைந்தது.  நீதிக்கட்சி துவங்கிய காலத்திலிருந்து, பார்ப்பனரல்லாதார் இயக்கம் என எதிர்மறை சொற்றொடரில் அழைப்பதை தவிர்த்து நேர்மறையான சொல்லான - திராவிடர் என்ற இன அடை யாள சொல்லே சரியானதென உணர்ந்தார் பெரியார். பிராமணனுக்கு எதிர்பதம் சூத் திரன். ஆரியனுக்கு எதிர் சொல் திராவிடன். ராமாயணமே ஆரிய திராவிட சண்டையை குறிப்பதென்பதை அறிஞர்கள் அறிவார்கள்.

* தமிழ் மொழி பேசும் எல்லா சூத்திரர்களும் தங்களை இனத்தால் திராவிடர்கள் என ஏற்றுக் கொள்வார்கள். தமிழ் பேசும் பிராமணர்கள் தங்களை ஒரு போதும் திராவிடர்கள் என ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவே நம்மை மொழியால் அடையாளப்படுத்துவதை விட இனத்தால் அடையாளப்படுத்த பெரியார் முடிவெடுத் தார். அதனால் தான் தமிழன் என்ற அர்த் தத்தை உள்ளடக்கிய திராவிடன் என்ற பெயரை முன்னெடுத்தார்!

* திராவிடர் கழகத்தினர் கருப்பு சட்டை அணிவது பற்றியும் கருப்பு சட்டை படையொன்று அமைப்பது பற்றியும் 17.11.1945 அன்று விளக்கம் வெளியானது.

* மதுரையில் முதலாவது மாகாண கருப்புச்சட்டை மாநாடு 1946ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இது திராவிடர் கழக வரலாற்றில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

* பேரறிஞர் அண்ணா 1949 செப்டம்பர் 17ஆம் தேதி திராவிடர் கழகத்திலிருந்து விலகி திமுகவை துவக்கினார்.

* திமுக தனியாக உருவான பின்னும், திராவிடர் கழகத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் தனது இறுதி நாள் வரை பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும், மாநாடுகளும், பயணங்களும், பத்திரிக்கை களில் எழுதுவதும், கோர்ட்களின் படியேறு வதும், சிறைச் சாலையில் ஓய்வெடுப்பதுமாக தந்தை பெரியாரின் வாழ்நாள் பயணம் இருந்தது.

இனி ஒரு தலைவன் அந்த சாத னைகளை முறியடிக்க முடியுமா என அவர் கடந்து சென்ற மைல்கற்கள் நிகழ்வுகளை அறிந்த பின்பு சிந்தித்து பாருங்கள்!

* வகுப்பு வாரி உரிமைப் போராட்டம் - 1950, ராஜாஜி மீண்டும் தமிழக முதல்வர் - 1952, குலக்கல்வி எதிர்ப்பு போராட்டம் - 1952, இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் - 1953, பிள்ளையார் பொம்மை உடைப்பு போராட்டம் - 1953, ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகல் - 1954, தமிழ்நாடு பெயரை சூட்டக் கோரி பிரச்சாரம் -1955

* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்ற, கர்ப்பகிரக நுழைவு போராட் டம் - 1970, சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு - 1971 - தந்தை பெரியார் மறைவு - 24.12.1973, அன்னை மணியம்மையார் கழக தலைவர் - 1974, மிசா அவசர சட்டத்தால் தலைவர்கள் கைது - 1975, அன்னை மணியம்மையார் மறைவு - 1978, பெரியாரின் நூற்றாண்டு விழாவில், பெரியார் கொண்டு வந்த தமிழ் எழுத்து சீர்திருத்தம் ஏற்கப்பட்டது -1978.

இராமன்பட எரிப்பு போராட்டம் அறிவிப்பு-1956, பிராமணாள் பெயர் பலகை அழிப்பு போராட்டம் - 1957, இந்திய அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் - 1957, ஜாதி ஒழிப்பு மாநாடு மற்றும் சுதந்திர தமிழ்நாடு மாநாடு - 1958, மூன்றாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் - 1965, கடவுள் மறுப்பு வாசகங் கள் உருவாக்கம் - 1967

சேலத்தில் 27.08.1944 அன்று நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில், அண்ணா கொண்டுவந்த தீர்மானத்தின்படி, கட்சியின் பெயரை - திராவிடர் கழகம் என மாற்றுவதாக முடிவு செய்யப்பட்டது. திரா விடர் கழகம் உதயமானது.

இப்படி நீண்டு கொண்டே போகிறது திராவிடர் கழக வரலாறு. ஒவ்வொரு இனத் திற்கும் வரலாறு முக்கியமானது. திராவிட இனத்திற்கும் வரலாறு மிகவும் முக்கிய மானது. அதை அறிந்து கொள்வது நமது கடமையானது.

இரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்த நூல் ஒரு வரலாற்று ஆவணம். தமி ழன்தான் ஏன் திராவிடன் என்பதை அறிய உதவும். ஆசிரியர் அய்யா கி. வீரமணிக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!

No comments:

Post a Comment