நூல்: திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
ஆசிரியர்: வெற்றிச்செல்வன்
கருஞ்சட்டை வெளியீடு
கிடைக்குமிடம்: எண் 120, என்.டி.ஆர். தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை - 24 பக்கங்கள் : 48
விலை: ரூபாய் 40/-
எதிர்த்து அழிக்க முடியாதவற்றை அணைத்து அழிப்பது பார்ப்பனியத்தின் இயல்பு. அந்த வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குறட்பாக்களை எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் அவர்களது சிந்தனைகளை வலிந்து திணித்து புதிய பொருளைக் கற்பித்து, வள்ளுவரை வைதிக மதத்தவர் ஆகவும் திருக்குறளை இந்துமத நூலாகவும் மாற்ற முயலும் பார்ப்பனியத்திற்கு எதிராக எழுதப் பட்ட சிறிய நூல் இது.
வள்ளுவருக்கு காவியுடை அணிவித் துக் காட்டும் இந்தக் கயவர்கள் திருக் குறள் இந்து மத நூல் என்று காட்டுவதற்கு எல்லாவகையிலும் முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிகளுக்கு எதிராக திருக்குறள் என்பது இந்து வர்ணாசிரம தத்துவத்தை மறுத்து எழுந்த ஒப்பற்ற சமத்துவ நூல் என்பதை மெய்ப்பிக்கவே இந்தச் சிறிய நூலை எழுதியுள்ளார். பரிமேலழகர் காலத்தில் தொடங்கியது இந்த திரிபுவா தம். அதே குரலை கோல்வால்கர் முதற் கொண்டு தொடர்ந்து ஒலித்து வருகின்ற னர். அந்த வரிசையில் தொல்லியல் துறையைப் படித்த டாக்டர் நாகசாமி என் பவரின்ஆங்கில நூல் வெளிவந்துள்ளது. அந்த நூலில், திருக்குறள் கருத்துகள் சமஸ்கிருத சாஸ்திரங்கள் ஆகிய அர்த்த சாஸ்திரம், நாட்டிய சாஸ்திரம், காமசாஸ் திரம் உள்ளிட்ட சாஸ்திரங்களில் இருந்து எடுத்து எழுதப்பட்டது. அவற்றின் சாரம் தான் திருக்குறள் என்று எழுதியிருந்தார். இதற்கு எதிராக பல்வேறுதரப்பில் இருந் தும் குரல் எழுந்தது. திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு தனி சிறப்புக் கூட்டமே நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரி யர் கி. வீரமணி அவர்கள், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், முனைவர் மறை மலை இலக்குவனார், எழுத்தாளர் பழ. கருப்பையா ஆகியோர் உரையாற்றினர். கூட்ட உரைகள் நாகசாமியின் நூல் புரட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டின. மேலும் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் ‘திருக்குறள் சாஸ்தி ரங்களின் சாரமா?’ எனும் தலைப்பில் ஒரு விரிவான மறுப்பு நூல் எழுதியிருந் தார். அதன் தொடர்ச்சிபோல் எளிய மொழி நடையில் இளைஞர்களுக்கு ஏற்ற வடிவமைப்பில் இந்த நூல் வெளி வந்துள்ளது.
கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக் களில் வரும் சில சொற்களைக் கொண்டு அவற்றை இந்து மதக் கடவுளுடன் கோத்து கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்த முள்ள இந்துமதம்‘ நூலில் வள்ளுவர் ஓர் இந்து என்று எழுதியிருந்தார். அது முற்றி லும் பிழை என்பதை தந்தை பெரியாரின் கருத்துகளைக் கொண்டு மறுக்கிறார் நூலாசிரியர்.
பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான்,தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் போன்ற சொற்களுக்கு தந்தை பெரியார் தரும் விளக்கம் பெரியார் களஞ்சியம் தொகுதி 37இல் திருக்குறள் தொகுதியில் உள்ளது.
இந்தியப் பண்பாடு குறித்து எழுதிய தன் நூலில், பார்ப்பனர்கள் பிச்சை கேட்பதில் - அவமானமோ வெட் கமோ அடைவதில்லை. அவர்களுடைய உரிமை போல் அதிகாரமாகக் கேட்கிறார் கள் என்னும் கருத்திற்கு ஆதரவாக மனுதர்மத்தின் இரண்டாவது அத்தியா யத்தில் பார்ப்பனர்கள் பிச்சை பெறுவது தொடர்பாக உள்ள சு லோகம் 182, 187, 235 போன்றவற்றைக் குறிப்பிட்டு அவற் றுக்கு நேரெதிரான நெறியை திருக்குறள் வலியுறுத்துவதைக் கூறி குறள் 222 , 1061, 1062 ஆகியவற்றைத் தந்து, மனு தர்மத்திற்கு நேர் விரோதமாக திருக்குறள் இருப்பதை நிறுவுகிறது இந்த நூல்.
மேலும் மனுதர்மத்தின் அய்ந்தாவது அத்தியாயத்தில் யாகம் என்ற பெயரால் உயிரினங்கள் வதைக்கப்பட்டு பார்ப் பனர்களால் உண்ணப்பட்டதை சுலோ கம் 27, 31, 30, 39, 40 ஆகியவற்றைத் தந்து, அதற்கு எதிராக உயிர்நேயத்தை வலி யுறுத்தும் குறட்பாக்களையும் தந்து அது குறித்த தந்தை பெரியாரின் கருத்தையும் ஆதாரமாக தந்து மனுதர்மத்திற்கு நேரெதிராக திருக்குறள் உள்ளதை விளக்குகிறார்.
இந்து சாஸ்திரங்கள் சனாதன அடிப் படைக் கொள்கையான பிறப்பின் அடிப் படையில், இருப்பதையும், குறள் ‘பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்று சமத்துவத்தைக் கூறுவதையும் விளக்கு கிறார்.
மனுதர்மம், பகவத் கீதை போன்ற ஹிந்து மத சாஸ்திரங்கள் அறிவைப் பயன்படுத்தி கேள்விகள் கேட்பதை எதிர்ப்பதையும் திருக்குறள் அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் தருவ தையும், மனுதர்மத்தின் இரண்டாவது அத்தியாயம் மற்றும் பகவத் கீதையின் பதினாறாவது அத்தியாயம் ஆகிய வற்றை ஆதாரமாகக் கொண்டு விளக்கு கிறது இந்த நூல். ‘
அரசர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து (இராஜதர்மம் குறித்து) மனுதர்மம் ஏழாவது அத்தியாயத்தில் விவரிக்கிறது.
அது ஜாதிக்கு ஒரு நீதி சொல்லும் விதமாகவும், பார்ப்பனர்கள் குற்றம் செய்தால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறும் சுலோகத்தையும் அதற்கு எதிராக நடு நிலையை வலியுறுத்தும் செங் கோன்மை என்னும் அதிகாரத்திலிருந்து குறட்பாக் களையும் தந்து இரண்டும் நேர் விரோத மானவை என்பதை விளக்குகிறார்.
பரிமேலழகர் எழுதிய பொருந்தாத மதச்சார்பு உரைகளே திருக்குறள் மீதான திரிபுக்குக் காரணம். திருக்குறள் குறித்த தவறான கற்பிதங்கள் மக்களிடம் பரப் பப்பட்டதற்குக் காரணம், பரிமேலழகர் போன்ற இந்து சனாதனவாதிகள் எழுதிய உரைகளே என்பதை தந்தை பெரியார் பல இடங்களில் எடுத்துக் காட்டியுள்ளார்.
தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கத்தவர்களும் திருக்குறள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னரே புதிய நோக்கைக் கொண்ட உரைகள் எழுதப்பட்டன. திருக்குறளின் உண் மைப் பொருளும் மக்களுக்கு விளங்கி யது.
ஆனால், தந்தை பெரியாரைப் பற்றிய அவதூறுகளில் ஒன்றாக - பெரியார் திருக்குறளை மலம் என்றார் என்று புரட்டான செய்தியைப் பரப்புகின்றனர். இத்தகைய புரட்டை உடைத்து திருக் குறள் மக்களிடம் பரவச் செய்ததில் பெரியாரின் பங்கே முதன்மையானது என்பதை ஏராளமான ஆதாரங்களுடன் தந்தை பெரியாரின் கருத்துகளையும் இணைத்து வழங்குகிறது.
குறளை மத நூல் என்று நிறுவத் தலைப்படும் இந்தக் காலகட்டத்தில் அதை முறியடிக்கும் முயற்சியாக வந்த இந்த நூல் அனைவராலும் படித்து, பாது காக்கப்பட வேண்டிய நூலாகும்.
- வை. கலையரசன்
No comments:
Post a Comment