"வேசியுடனோ, கன்னிகையுடனோ சம்பந்தம் வைத்துக் கொள்வது குற்றமாகப் பார்ப்பனர் கண்ணுக்குத் தோன்றுவ தில்லை. மாமூலுக்கு விரோதமாக சிறி தளவு மாறினாலும் கொடிய குற்றமாகக் கருதும் இப் பார்ப்பனர்கள் இதுபற்றிக் கவலைப் படவில்லை. பார்ப்பனர்களின் உபயோ கத்திற்காகவே ஆதியில் தேவ தாசிகளையும், பரத்தையர்களையும் கோயில்களில் ஏற்படுத்தினார்கள்.
'வேசிய தரிசனர் புண்ணிய பாபநாசம்' என்று ஒரு சுலோகத்தை பார்ப்பனர்கள் அடிக்கடிச் சொல்லுவதன் பொருள். 'வேசியைத் தரிசித்தால் பாவம் போய் புண்ணியம் ஏற்படும்' என்பதாகும்."
ஆதியில், கோயிலில் பரத்தையர் களும், நடனமாதர்களும், தேவதாசி களும், பார்ப்பனர் சுகபோகத்திற்காக மட்டுமே தனிப்பட ஒதுக்கப்பட்டிருந் தார்கள் என்று தெரிகிறது. ஒரு பிரத்தியேக முறையில் இவ்விலைமாதர்கள் பொட்டுக் கட்டப்படுகிறார்கள்.
ஒவ்வொரு கோயிலிலும் எட்டு, பன்னி ரெண்டு அல்லது கூடுதலான தேவதாசி கள் இருக்கிறார்கள். இவர்கள் தினந் தோறும் இருமுறையும், திருவிழாக் காலங் களிலும் ஆடல் பாடல் நடத்த வேண்டும்.
- ஆபே தூபே,
Hindu manners customs
and ceremonies
No comments:
Post a Comment