காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும் மாவட்டங்களின் பட்டியலில் சென்னைக்கு ஏழாம் இடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும் மாவட்டங்களின் பட்டியலில் சென்னைக்கு ஏழாம் இடம்

இந்திய அளவில் தீவிர காலநிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 7ஆம் இடத்தில் சென்னை இருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

“Mapping India’s Climate Vulnerability’ எனும் தலைப்பில் ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழுவானது (Council on Energy, Environment and Water)  முதல் முறையாக மாவட்ட அளவிலான கால நிலை பாதிப்பு குறித்த மதிப்பீட்டாய்வை மேற்கொண்டுள்ளது. இதை மேற்கொள் வதற்காக இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காலநிலை பாதிப்புக் குறியீட்டை (Climate Vulne rability Index)  CEEW உருவாக்கி யுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அறியவும், பாதிப்பிலிருந்து தடுக்க மற்றும் தகவமைத்துக் கொள்ள உதவியாகவும் அமையும் என ஆய்வை மேற்கொண்ட அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்தியா முழுவதும் தீவிர கால நிலைப் பேரழிவு நிகழ்வுகளால் மிக அதிகமாகப் பாதிப்படையக் கூடிய மாவட்டங்களின் பட்டியலில் சென்னை 7 ஆம் இடத்திலும் திருநெல்வேலி 23ஆம் இடத்திலும் உள்ள .

No comments:

Post a Comment