நாட்டிலேயே பீகார் மாநிலத்தில் அதிக சதவீதத்திலான ஏழைகள் உள்ள தாக நிட்டி ஆயோக் வெளியிட்ட பலபரி மாண வறுமைக்குறியீட்டுப் பட்டி யலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மாநிலங்களில் காணப்படும் வறுமை நிலை குறித்து நிட்டி ஆயோக் ஆய்வு நடத்தியது.
அதனடிப்படையில், தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டுப் பட்டியல் வெளியிடப்பட் டது. அதில் 51.91 சதவீத ஏழை மக்களுடன் பீகார் முதலிடத்தில் உள்ளது. 42.16 சதவீத ஏழைகளுடன் ஜார்க்கண்ட் 2-ஆவது இடத்திலும், 37.79 சதவீத ஏழைகளுடன் உத்தரப் பிரதேசம் 3-ஆவது இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியல் தொடர்பாக நிட்டி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆக்ஸ்ஃபோர்டு வறுமை-மனித வளர்ச்சி முன்னெடுப்பு, அய்.நா. வளர்ச் சித் திட்டம் உள்ளிட்டவை வகுத்த வழி முறைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகாதா ரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு குடும்பங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின்போது மக்களின் ஊட்டச்சத்து, குழந்தை உயிரிழப்பு விகிதம், பேறுகாலத் துக்கு முந்தைய பராமரிப்பு, கல்வி கற்கும் ஆண்டுகள், பள்ளி வருகை சதவீதம், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள், குடிநீர், மின் சாரம், வீட்டு வசதி, சொத்துகள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறியப்பட் டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்கை வகுப்பு முக்கியப் பங்கு
அறிக்கையின் முன்னுரை யில் நிட்டி ஆயோக் துணைத் தவை வர் ராஜீவ் குமார், ‘தேசிய பலபரிமாண வறுமைக் குறியீடு, அரசின் கொள்கைகளையும் திட்டங்களை யும் வகுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
வறுமை குறித்து பல்வேறு பரிமாணங் களில் திரட்டப்படும் தர வுகள், மக்கள் நலத் திட்டங்களை வகுப்பதற்கு அடிப் படையாக இருக்கும்.
இதன்மூலமாக அரசின் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேர் வது உறுதி செய்யப்படும். கடந்த 2015-2016இல் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின் (என்எஃப் எச்எஸ்) தரவுகள், பல பரிமாண வறுமைக் குறியீட்டைக் கணக்கிடுவதற்கு அடிப் படையாகக் கொள்ளப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
இந்த அட்டவணையில் தமிழ்நாடு 24ஆம் இடத்தில் உள்ளது (4.89%).
No comments:
Post a Comment