நீண்ட காலத்திற்கு முன்பே ஊட்டப்பட்ட விழிப்புணர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

நீண்ட காலத்திற்கு முன்பே ஊட்டப்பட்ட விழிப்புணர்வு

தஞ்சாவூரில் 1971-1972 ஆம் ஆண்டு குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அளவான குடும்பம் குறித்த விழிப்புணர்வு விளம் பரங்களால் மக்களிடையே மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஓர் அக் கறை ஏற்படத் துவங்கியது.

மாவட்டத்தில் உள்ள விவசாயத்துறை மற்றும் இதர துறையினரும் உள்ளூர் அரசியல் தலைவர்களும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பு களைப் பற்றி பிரச்சாரமாகச் செய்து வரு கின்றனர். இந்தியா முழுவதும் இது போன்ற பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஆனால், தமிழ்நாட் டில் மக்கள் தொகை அதிகரித்தால் ஏற்படும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச் சாரம் நீண்ட காலத்திற்கு முன்பே மக் களிடையே கொண்டு செல்லப்பட்டது.

சமூகப் புரட்சியாளரான பெரியார் ராமசாமி நாயக்கர் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஜாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தவர், இவர் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் சுதந்திரமே சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று உணர்ந்தவர். தன்னுடைய எழுத்துகளில் பெண்கள் வெறும் குழந்தை பெறும் கருவியாக இருக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும் பெண்கள் தங்களின் சமூக பொருளாதார நிலையை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்ற துடன், திருமணம் மற்றும் குழந்தைபெறு வதை பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்த பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உறுதியுடன் கூறினார்.  அதேபோல் பெரியார் வழிவந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன்னுடைய கவிதைகளில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் இன்னல்கள் குறித்து எழுதிவந்தார்.

இந்தியாவில் குடியாட்சி ஏற்பட்டு 30 ஆண்டுகள் வரை மக்கள் தொகைப் பிரச்சினையை தீர்க்க தீர்வுகளைத் தேடிக்கொண்டு இருக்கும் போது தென் இந்தியாவில் நீண்டகாலத்திற்கு முன்பே மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் குடும்பக்கட்டுப்பாடு குறித்த விழிப்பு ணர்வை ஊட்டியுள்ளனர்.

பொறுப்பாசிரியர், ரேஷ்மி சக்சேனா எழுதிய ஆங்கிலக் கட்டுரையின்

ஒரு பகுதி, The week-22.3.1992

No comments:

Post a Comment