தஞ்சாவூரில் உடன்கட்டை ஏற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

தஞ்சாவூரில் உடன்கட்டை ஏற்றம்

18ஆம் நூற்றாண்டில் தஞ்சையில் வாழ்ந்து வந்த மராட்டியப் பார்ப்பன வாலிபன் ஒருவன் அரசாங்க உத்தியோ கத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் கோகிலா என்ற பெண்ணை மணந்து இனிது வாழ்ந்து வரும்பொழுது திடீரென்று இறந்து போனான். அவனது மனைவி கோகிலாவையும் அவனுடைய உடலு டன் உடன்கட்டை ஏற்ற பார்ப்பனர்கள் அவளை அலங்கரித்து கணவனின் சவத் திற்குப் பின்னதாக ஊர்வலமாக சுடு காட்டிற்கு அழைத்துப் போனார்கள். 

இதனை வேடிக்கை பார்க்கக் கூடி நின்ற ஆங்கிலேயே இராணுவத்தினர் சிலர் மிகவும் மனமிரங்கி இவளை எப் படியாவது இந்தக் கொடியவர்களின் கையில் இருந்து விடுவித்து உயிர்ப் பிச்சை அளிக்க வேண்டும் என்று கருதி னர். இவர்கள் துணிந்து கூட்டத்திடையே புகுந்து அவளை மீட்டுக் காப்பாற்றினர். இப்படி உடன்கட்டை ஏற்றப்பட இருந்த பெண் விடுவிக்கப்பட்டது பார்ப்பனர்க ளுக்கு மிகவும் சினத்தை மூட்டியது. பெருத்த ஏமாற்றத்துடன் கணவனின் பிணத்தை மட்டும் சுடுகாட்டுக்கு எடுத் துச் சென்று எரித்துவிட்டு வீடு திரும் பினர்.

பார்ப்பனர்கள் உடன்கட்டை ஏறுவதில் இருந்து தப்பிச் சென்ற அந்தப் பெண்ணை அவள் வீட்டுக்குத் திரும்பி வர ஒட்டாமல் தடுத்தார்கள். அவளை வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண் டால் அந்தக் குடும்பத்தையே ஜாதிப் பிரஷ்டம் பண்ணிவைத்து விடுவோம் என்றும் கூறி மிரட்டினார்கள். இப்படி யாக அனாதையாகிவிட்ட அந்தப் பெண்ணை பட்டாளத்துக்காரர்களே வளர்த்து வரலானார்கள். அவள் இராணு வத் தலைவர் கர்னல் லிட்டில்டன் பங்க ளாவிலேயே தங்கி ஆங்கில மொழியைக் கற்று நன்கு தேர்ச்சி பெற்றாள். 

இவளே பிறகு ‘ஸ்வாட்ஸ்’ பாதிரியா ரால் 1778இல் ஞானஸ்நானம் அளிக்கப் பட்டு ‘இராயல் குளோரிந்தாள்’ என்னும் பெயரை ஏற்று திருநெல்வேலி மாவட்டத் தில் சுவிசேஷ ஊழியத்தை முதன் முத லில் துவக்கி வைத்தவள் ஆவாள்.

No comments:

Post a Comment