அன்று சாரங்கபாணியாக 11 வயதில் பேச்சைத் தொடங்கியவர் இன்று மானமிகு ஆசிரியர் கி.வீரமணியாக பேசிக் கொண்டிருக்கிறார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

அன்று சாரங்கபாணியாக 11 வயதில் பேச்சைத் தொடங்கியவர் இன்று மானமிகு ஆசிரியர் கி.வீரமணியாக பேசிக் கொண்டிருக்கிறார்!

(பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெருமித பேச்சு!)

வணக்கம்! நான் சுப.வீரபாண்டியன்,

சாரங்கபாணி என்னும் 11 வயது சிறுவன், மேடையில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கவே பார்த்த பலருக்கும் வியப்பாகவே இருந்தது!

அப்படி அந்தச் சிறுவனை தயார் செய்த பெருமை அவருடைய ஆசிரியர் திராவிட மணி அவர்களைத்தான் சாரும்!

எங்கள் ஊரில் வந்து பேசச்சொல்லுங்கள், எங்கள் ஊரிலும் பேசச் சொல்லுங்கள் என்று பல ஊர்களிலிருந்தும் அழைப்புகள் வரத் தொடங்கின!

ஆசிரியரே ஓர் உதவியாளரைப் போல் இருந்து, இந்த இந்த ஊரில், இந்த இந்த வாரம் பேசலாம் என்று முடிவு செய்து, அந்தச் சாரங்கபாணியையும் அழைத்துக் கொண்டு போய் வந்தார் !

அந்தச் சிறுவனின் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பரவலாக வரவேற்பைப் பெற்றது! தொடர்ந்து பேசி பெரிய பேச்சாளனாக அந்தச் சாரங்கபாணி மாறினார்!

இன்றைக்கு (2.12.2021) 89ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளிலும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்!

அன்று அந்தச் சிறுவனின் பெயர் சாரங்கபாணி, இன்று அந்தத் தலைவரின் பெயர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி!

- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

(இணையதளத்தில் பேச்சு)

2.12.2021

No comments:

Post a Comment