திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருச்சி, டிச.3 திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் சிறப் பாக கொண்டாடப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89 ஆவது பிறந்த விழா (நவ.2) தமிழகம் முழு வதும் சிறப்பாக கொண்டாடப் பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலை மற்றும் புத்தூர் பெரியார் மாளிகையி லுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 இதில் மண்டல செயலாளர் .ஆல்பர்ட், முபாரக்அலி, குணா, சேவியர், அறிவுச்சுடர், பாலாஜி, ராஜசேகர், மகாமணி, கிரேசி, தேவா, திருநாவுக்கரசு, கண்ணன், சசிகாந்த், அண்ணாதுரை, மணி வேலன், சோமு, ஆல்பர்ட், விமல், அருண் செந்தில் ரூபி, பெரியார் புத்தக நிலைய மேலா ளர் மெர்லின் மற்றும் பணியாளர் கள், தோழர்கள் கலந்து கொண் டனர்.  சிறீரங்கத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு சிறீரங்கம் நகர திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பகுத்தறிவாளர்கள் மாநகர செயலாளர் மலர்மன்னன் தலை மையில் புத்தூர் நான்கு சாலை யில் பொதுமக்களுக்கு இனிப்பு கள்  மற்றும் 300க்கும் மேற் பட்ட  பொதுமக்களுக்கு பகுத் தறிவு நூல்கள் வழங்கினர்.

இதில் பொறியாளர் மதி வாணன், குத்புதீன், பொன் யோகராசு, ஆசிரியர் கவுதமன், பென்னி, முபாரக், நேதாஜி, ஜெயராஜ், ஜெயில் பேட்டை குணா, ஜெயில் பேட்டை மகளிர் அணி தோழர்கள் வசந்தி, சங்கீதா, மற்றும் பெரியார் பிஞ்சுகள் பெரியார் செல்வன், இரணியன் ஆகியோர்  கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment