சீனப் பொருட்களுக்கு 5 ஆண்டு தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

சீனப் பொருட்களுக்கு 5 ஆண்டு தடை

புதுடில்லி, டிச. 28- சீனாவில் இருந்து இறக்குமதி செய் யப்படும் 5 பொருட்க ளுக்கு 5 ஆண்டு இறக்கு மதி தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர் களைக் காக்க மலிவுவிலை பொருட்கள் குவிப்பு தடுப்பு (ஆன்டி டம்பிங்) சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் நேரடி வரி மற் றும் சுங்கத் துறை வாரியம் (சிபிஅய்சி) தெரிவித்து உள்ளது.

உருளை வடிவிலான அலுமினியம், சோடியம் ஹைட்ரோ சல்பைட் (சாய தொழில் துறை யினர் பயன் படுத்துவது), சிலிகான் சீலன்ட் (சூரிய மின்னுற்பத்தி கலன் மற்றும் அனல் மின்கலன் தயாரிப்புக்கு பயன்படு வது), ஹைட்ரோ புளோரோ கார்பன் (எச் எப்சி), காம்போனென்ட் ஆர். 32 மற்றும் ஹைட் ரோபுளோரோ கார்பன் சேர்மம் (ரெபரிஜிரேட் டரில் பயன்படுத்துவது) ஆகியவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஒன்றிய வர்த்தக அமைச்சகத்தின் புல னாய்வுப் பிரிவின் பரிந் துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. வர்த்தக தீர்வு இயக்குநரகம் (டிஜிடி ஆர்) இந்த நடவடிக் கையை எடுத்துள்ளது.

இந்தப் பொருட்களை இந்திய சந்தை விலையை விட குறைந்த விலைக்கு சீனா ஏற்றுமதி செய்வது தெரியவந்தது. இதனால் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஈரான், ஓமன், சவுதி அரேபியா, அய்க்கிய அரபு அமீரகம் ஆகிய பகுதி களிலிருந்து இறக் குமதி செய்யப்படும் ஜிப் சம் உப்புக்கு 5 ஆண்டு தடை விதிக்கப் பட்டுள் ளது. இவ்விதம் இறக்கு மதி செய்யப்பட்டால் அவற் றுக்கு அதிக வரி விதிக்கவும் பரிந்துரைக் கப்பட்டு உள்ளது.

அதிக எண்ணிக்கையிலான சீன தயாரிப்புக ளுக்கு பொருள்குவிப்பு தடுப்பு விதியை பயன்படுத் தும் நாடுகளில் முதலாவ தாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment