அடுத்த தலைமுறையை உருவாக்க மகளிரணியில் இளம்பெண்களை சேர்க்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 28, 2021

அடுத்த தலைமுறையை உருவாக்க மகளிரணியில் இளம்பெண்களை சேர்க்க வேண்டும்

மக்களவை உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள்

சென்னை, டிச. 28- தி.மு.. மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினரு மான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொள்கை உறுதி கொண்ட இளைஞர்களா லும், எழுச்சிமிக்க பெண் களாலும் கட்டமைக்கப் பட்ட பேரியக்கம் தி.மு.. நமது கட்சியின் அடித்தள மாக விளங்கும் இளைஞர் கள் பலரை நம் கொள்கை கள் சென்றடையவும், நமது  கட்சியில் அவர்களை உறுப் பினர்களாக இணைக்க வும் நம் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.. ஸ்டாலின் கடந்த 18ஆம் தேதி நடந்த கட்சி யின் மாவட்டச் செயலா ளர்கள், நாடாளுமன்ற மற் றும் சட்டமன்ற உறுப்பி னர்கள் கூட்டத்தில் அறி வுறுத்தினார்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் சரிசமமான பங்குடையவர்கள் பெண் கள். அதிலும் நாளைய சமு தாயத்தின் சிந்தனையை வடிவமைக்கும் திறன் பெற்றவர்கள் இன்றிருக் கும் 18 முதல் 30 வயதுடைய இளம் பெண்கள். நமது கட்சியின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்த இளம் பெண்களின் பங்கு இன்றியமையாதது.

தி.மு..வின் மய்யக் கோட்பாடாக விளங்கும் சமூக நீதி சிந்தனையின் வெளிப்பாடே அரசியலில் பெண்கள் தனக்கென உரி மைகளை உருவாக்குவது. நமது கட்சியின் மகளிரணி அடுத்த தலைமுறைக்கான சுயசிந்தனை உடைய, உரி மைகளை உணர்ந்த இளம் பெண்களை உருவாக்க வேண்டும். அந்த விதத்தில் இன்றிருக்கும் 18 முதல் 30 வயதுக்குள்ளான இளம் பெண்களை நமது கட்சி யில்மகளிரணி உறுப்பினர் களாக' இணைத்து அவர் களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.

அரசியலில் ஆர்வம் காட்டத் துடிக்கும் இளம் பெண்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதைத் தாண்டி, நாம் 18 முதல் 30 வயதுக்குள் உள்ள இளம்பெண்களை மகளிரணி உறுப்பினர்க ளாக இணைத்து அவர் களுக்கு அரசியலின் மேல் ஈடுபாடு ஏற்பட வழி செய்து நமது கட்சியின் எதிர்காலத்துக்கான அடித் தளம் வலுவாக உள்ளதை உறுதி செய் வோம்.

இந்த முக்கியமான முயற்சியை நீங்கள் அனை வரும் இன்றே தொடங்கி, இதில் ஏற்படும் முன்னேற் றங்கள் மற்றும் அது சம் பந்தமான தகவல்களை அணித் தலைமையுடன் தினந்தோறும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment