டாக்டர் ஷாலினி வாழ்த்துச் செய்தி
முகநூலில் டாக்டர் ஷாலினி பதிவிட்டுள்ளதாவது,
நான் என் பதின்பருவத்தில் ஆர். எஸ். எஸ்ஸால் indoctrinate செய்யப்பட்ட மாணவி.
எனக்கு பெரியாரை பற்றியோ, ஜாதி ஒழிப்பு பற்றியோ, பெண்ணியம் பற்றியோ எதுவுமே தெரியாது.
ஆனால் ராமாயணம், மகாபாரதம் என்றால் பாயிண்ட் பை பாயிண்ட் தெரியும்....
யாராவது வெளிநாட்டவர் என்பக்கத்தில் உட்காரும் துர்பாக்கியம் பெற்றிருந்தால் போதும், "பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று ஆரம்பித்தால்.....ஆங், சொல்ல மறந்து விட்டேனே, பாரதியார் பாடல்கள் பலதும் அத்துப்படி! நிறைய சமஸ்கிருத ஸ்லோகம், ஸ்தோத்திரமும்....
ஆனால் இவை எதுவுமே எனக்கு உண்மையில் பயன்படவே இல்லை. வெறும் ஒரு mindjob தான்.
நானே, என் சொந்த அறிவை பயன்படுத்தி, இந்த silly sentiments, unfit for my survivalலை விட்டு என்னை விடுவித்துக்கொண்டே வந்த காலத்தில் தான் ஆசிரியர் திரு வீரமணி அவர்களை சந்தித்தேன். அவர் மூலமாக "The Role of Periyar in the everyday life of each Tamil woman" என்ன என்பதை தெரிந்துக் கொண்டேன்.
That was my moment of Enlightenment.
அதன் பிறகு எனக்கு வாய்த்த தெளிவும், தீர்க்கமும், வீரியமும், வல்லமையும்!
பெரியார் எனும் எவரெஸ்ட் மேலே நின்றால், all clear perspectives தான்.
ஏற்கனவே நான் "யமனையே பலகாரம் செய்பவள்" என்று பெயர் எடுத்த பேர்வழி. இப்போது யமனின் கொள்ளுத் தாத்தாவை பலகாரம் செய்த பெரியார் என் டீம்மேட்..... What a combo! என்னை எப்படி டீல் செய்வது என்பது சாதாரண ஆண்களுக்கு எல்லாம் பெரிய சவால்....
என்னை சமாளிக்க கஷ்டப்படும் ஆண்களை பார்த்து எனக்கு பரிதாபமாய் இருக்கும்....."ஹலோ உன்னை நான் ஒன்னும் பண்ண மாட்டேன் மேன். பம்மாதே! பாயாதே! ஜெஸ்ட் சில் ஓகே?" என்று சமாதானம் சொல்ல தோன்றும்.
அப்படி ஒரு walking talking misogyny detecting Rorschach Psychodiagnostik ஆகிய என்னை மிக இயல்பாக கையாளத் தெரிந்த மிக சிலரில் முக்கியமான ஒருவர் டாக்டர் வீரமணி அவர்கள்.
சந்திக்கும் போதெல்லாம், வாஞ்சையாக கைக் குலுக்கி, "என்ன புக் எழுதுனீங்க?" என்பார். அப்புறம் நாங்கள் பேச ஆரம்பித்தால்..... வரலாறே எழுந்து வந்து என்னிடம் பேசுவது போல...
Timeless, ageless, genderless mind-bonding camaraderie எப்படி இருக்கும் என்பதை உணரலாம்.
Those who don't need a God to self regulate themselves, are the most genuinely humane.
Happy Birthday Asiriyar Veeramani Sir.
May you have long, healthy and happy years ahead!
May we have many more riveting conversations.....
No comments:
Post a Comment