ஒரு போதும் இந்தியைத் திணிக்க முடியாது மாநிலங்களவையில் வைகோ முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

ஒரு போதும் இந்தியைத் திணிக்க முடியாது மாநிலங்களவையில் வைகோ முழக்கம்

புதுடில்லி,டிச.4- நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில்  நேற்று (03.12.2021) சுழிய நேரத்தின் போது, (Zero Hour) வைகோ ஆற்றிய உரை.

இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்புகின்ற வரையிலும், இந்தியாவின் ஆட்சிமொழியாக, இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக் கும்; இந்தியைத் திணிக்க மாட் டோம் என்ற உறுதிமொழியை, மறைந்த பிரதமர் பண்டித ஜவ கர்லால் நேரு அவர்கள் வழங் கினார்.

அண்மையில், வாரணாசியில் நடைபெற்ற ராஜபாஷா மாநாட் டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், கடிதங்கள் அனைத் தையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம்எனக் கூறி உள்ளார். இந்தி பேசாத மாநிலங் களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்துறை அமைச்சகத்தின் கடிதங்கள் இந்தியில் மட்டுமே வருகின்றன.

அடக்குமுறை ஆகும்

இது ஒரு அடக்குமுறை ஆகும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகின்றது.

மேலும், ஒன்றிய அரசு அறி விக்கின்ற அனைத்துத் திட் டங்கள் மற்றும் செயல்பாடுகளின் பெயர்கள் அனைத்தும், இந்தியில் மட்டுமே இடம் பெறுகின்றன. அதற்கான, ஆங்கில மொழி பெயர்ப்பு வழங்கப்படுவது இல்லை. அதன் விளைவாக, இந்தி  பேசாத மாநில மக்களுக்கும், நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும் அந்தத் திட்டங்களின் குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; எடுத் துச் சொல்ல முடியவில்லை. இந்தத் திட்டங் களுக்காக, ஒன் றிய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகின்றது. ஆனால், அந்தத் திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதன் முழு மையான பயன்களை மக்கள் பெற முடியவில்லை.

கடுமையாக எதிர்க்கின்றோம்

ஒன்றிய அரசின் திட்டங் களுக்கு, ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டி வந்த நிலையை மாற்றி, இந்தியில் மட்டுமே பெயர் சூட் டுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின் றோம்.

அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், இந்தி யாவின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின் றோம். அண்மையில், பஞ்சாப் மாநிலச் சட்டமன்றம், பஞ்சாபி மொழிக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் எனத் தீர் மானம் இயற்றி இருக்கின்றது.

எனவே, அரசு அமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, எட்டாவது அட் டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், ஒன் றிய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

1965 ஆம் ஆண்டு தமிழ்நாட் டில் இந்தியைத் திணித்தபோது, அதற்கு எதிரான போராட்டம் எரிமலையாக வெடித்த நிலையில், எங்களின் மதிப்பிற்குரிய தலை வர், திராவிட முன்னேற்றக் கழ கத்தின் நிறுவனர், மறைந்த பேர றிஞர் அண்ணா அவர்கள் இதே அவை யில் பேசும்போது, தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொன்னார்.

அதே உணர்வுகள்தான் இன் றைக்கும் நீடிக்கின்றன. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது.

இவ்வாறு வைகோ பேசினார்.

அவரது பேச்சுக்கு இடையூ றுகள் எழுந்தன.

ஆனால், தி.மு. கழக நாடா ளுமன்ற உறுப்பினர்களும், தென் மாநிலங்களைச் சேர்ந்த பல உறுப் பினர்களும் வைகோவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment