தமிழர் தலைவர் ஆசிரியர் 89ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
டிசம்பர் திங்கள் 2 ஆம் நாளில் பிறந்தநாள் விழா காணும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு நெஞ்சம் இனிக்கும் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கம்போல இந்த ஆண்டும் அவரின் பிறந்தநாள் சுயமரியாதை நாளாக நாடு முழுக்க கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிவு மணம் கமழும் நூல்கள் பெரியார் திடலில் வெளியிடப்படுகின்றன.
8 வயதிலேயே அறிவாசான் பெரியாரிடம் அடைக்கல மாக சென்று அவருக்கு தொண்டு ஊழியம் செய்து அவரது கொள்கைகளை நாடு முழுக்க பரப்பி அவர் நிறுவிய திராவிடர் கழகம் எனும் தமிழர் உரிமை காக்கும் பாசறையை உயிர்த்துடிப்போடு இயக்கிவரக் கூடிய அண்ணன் கி.வீரமணி அவர்கள் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு உரியவர் என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆவார்.
“வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமூகநீதிக் கொள்கை பளிங்கு சமாதிக்குப் போயிருக்கும். அதிலிருந்து வீரமணி யின் செல்வாக்கு பலமடங்கு உயர்ந்தது. தமிழக பொது வாழ் வில் அவருக்கு பெரிய வடிவமும் அமைந்துவிட்டது. அவருடைய தலைமையில் திராவிடர் கழகம் நடத்துகின்ற போராட்டம் எதுவாக இருந்தாலும் ஒழுங்காகவும், கட் டுப்பாட்டுடனும் நடப்பது வழக்க மாகிவிட்டதால் திராவிடர் கழகம் தனி மரியாதையை பெறுவது சகஜமாகிவிட்டது” என்று மண்டல் குழு அறிக்கை நிறைவேற்றப்பட்ட காலகட்டத்தில் மலேசி யாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ்முரசு' நாளேடு, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தனிச் சிறப்பை எடுத்து விளக்கியது.
“உலகத்தில் தமிழ் இனம், திராவிடப் பாரம்பரியம் எங்கிருந்தாலும் மகிழ்வோடும், இன்ப முகிழ்வோடும் வாழ வேண்டும் என்பதனை உயிர் மூச்சாய் கொண்டு வாழும் ஒப்பற்ற தலைவர் கி.வீரமணி. தமிழ்ச் சமுதாயம் எழுச்சி யுடன் வாழ வேண்டும் என சிந்தித்த தந்தை பெரியாரின் விரிவாக்க சிந்தனையாளர் அவர். தமிழகத்தில் எதையும் படித்து ஆய்ந்து ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் கருத்து வளமிக்க கரிபால்டி அவர். அவர் உயிர் வாழ்வது தமிழர்களுக்காக, உணர்வு பொங்க அவர் பேசுவது, தமிழர் மேம்பாட்டுக்காக ஓய்வின்றி உழைப்பது ஆகியவைகள் அவரின் அரும்பெரும் குணநலன்கள்” என்று மலேசியாவில் இருந்து வெளிவரும் ‘தமிழ் நேசன்' எனும் நாளேடு, ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு புகழ் மாலை சூட்டி பெருமைப்படுத்தியது.
இவ்வாறு கடல் கடந்த நாடுகளில் உள்ளவர்களும் பாராட்டி பெருமை சேர்க்கும் பெரியாரின் கொள்கை வாரிசு - பெரியாரின் கொள்கை முரசு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்கள் ஆயிரம் பிறை கண்டு நூறாண்டுக்கு மேல் நல்ல உடல் நலத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழினம் காக்கும் தூய பணியை தொய்வின்றி தொடர வேண்டும் என்ற விழைவுடன் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சமூகநீதிக்காக அயராது பாடுபடுபவர் ஒ.பன்னீர்செல்வம் வாழ்த்து
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருபவரும், திராவிடர் கழகத் தலைவருமான மதிப்பிற் குரிய திரு.கி.வீரமணி அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மதவெறி சக்திகளை எதிர்க்கும்
தலைவர் வீரமணி வாழ்கவே
கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,
சிறு வயதிலேயே தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து 10 வயதிலேயே மேடைப் பேச்சாளராக அறிமுகமானவர் திரு கி. வீரமணி அவர்கள். பெரியார் வகுத்திட்ட சமூக நீதி கொள்கைக்காக பெரியா ருக்கு பிறகு தொடர்ந்து போராடி வருபவர். ஏற்றுக் கொண்ட கொள் கைக்காக தனது வாழ்க்கையில் 54 முறை சிறைபடுத்தப்பட்டார். மத வெறி இந்துத்துவா சக்திகளை எதிர்த்த போராட்டத்தில் உறுதி குன்றாத போராளி. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர். நெருக்கடிகளையும், சோத னைகளையும் எதிர்கொண்டு சமூக நீதிக்காக உறுதியாக போராடி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உடல் ஆரோக்கியத்தோடு இன்னும் பல ஆண்டு கள் வாழ்ந்து சமூக நீதி பணியைத் தொடர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 89ஆவது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமரசமற்ற போராளி ஆசிரியர் அய்யா
தொல்.திருமாவளவன் எம்.பி., வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் எம்.பி., விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:இன்று பிறந்தநாள் காணும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்க ளுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
ஜாதியமைப்பைத் தகர்த்து சமத்து வத்தை நிறுவிட சமூகநீதிக் களத்தில் சமர சமின்றிப் போராடும்
தந்தை பெரியாரின்
தன்மானப் படைத்தலைவர்
நீடூழி வாழ்ந்திட
நெஞ்சார வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment