தமிழர் தலைவரை வாழ்த்தும் நெஞ்சங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 3, 2021

தமிழர் தலைவரை வாழ்த்தும் நெஞ்சங்கள்

கவிப்பேரரசு வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்துப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தமிழர் தலைவர்

பகுத்தறிவுப் பேராசான்

கி.வீரமணியின்

89ஆம் பிறந்தநாளான இன்று

அவர் இல்லம் சென்று

சிறப்புச் செய்தேன்

நல்வாய்ப்பாக

மாண்புமிகு முதலமைச்சர்

தளபதி மு..ஸ்டாலின்

திரு.துரைமுருகன்

உள்ளிட்ட அமைச்சர்கள்

ஆசிரியரை வாழ்த்த வந்திருந்தனர்

என் வாழ்த்தையும்

இணைத்துக்கொண்டேன்

பேரா.சுபவீ

பேரா.சுபவீ டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தனிவாழ்வும் பொதுவாழ்வு! பொதுவாழ்வே தனிவாழ்வு

தயாநிதிமாறன் எம்.பி.,

இன்று (டிச. 2) பிறந்தநாள் காணும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

ரவிக்குமார் எம்.பி.,

இன்று பிறந்தநாள் காணும் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்

வன்னிஅரசு

விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னிஅரசு டிவிட்டர் பதிவில் சமூக நீதி,பகுத்தறிவு, தமிழர் உரிமை, இந்தியம் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு, மானுட விடுதலை என எப்போதும் ஆசிரியராய் நின்று வழிநடத்தும் எங்கள் அய்யா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி

தந்தை பெரியார் காட்டிய சமூக சீர்திருத்தத்துக்கான பாதையை தேர்ந்தெடுத்து, பகுத்தறிவு கொள்கைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல அயராது உழைக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வணங்குகிறேன்.

உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் முதன்மை மாணவர், முத்தமிழறிஞரின் அன்பு சகோதரர்  அய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சுயமரியாதை உணர்வு மேன்மேலும் பெருக, சமூகநீதி வெல்ல தொடர்ந்து பாடுபடும் அய்யா அவர்களின் வழியில் நடைபோடுவோம். அய்யா அவர்களுக்கு அன்பும் வாழ்த்தும்.

நாஞ்சில் சம்பத்

பல்கலைக்கழகமாய் , பகுத்தறிவு சுரங்கமாய், திராவிட இயக்கக் கலங்கரை விளக்கமாய் திகழும் தந்தைப் பெரியாரின் தலை மாணாக்கர் ஆசிரியருக்கு ஆயிரம் பிறை காண பாயிரம் பாடுகிறேன் - மாணவன் நாஞ்சில் சம்பத்.

மாதவரம் சுதர்சனம்

டிசம்பர் 2இல் பிறந்தநாள் விழா காணும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர்  அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

.மு.மு.. பொதுச்செயலாளர்

பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி

சமூகநீதியின் சங்கநாதம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நீடூழி வாழ்க..! உதயநாளில் இதய வாழ்த்துகள்.

எஸ்டிபிஅய் நெல்லை முபாரக்

பெரியாரின் தொண்டராய், சனாதனத்திற்கெதிரான சிம்மசொப்பனமாய், சமூகநீதியின் காவலனாய், மொழிப் போரின் முன்னோடியாய், தமிழின உணர்வின் நிதர்சனமாய் வாழும் தமிழர் தலைவர் மானமிகு அய்யா கி.வீரமணி அவர்களுக்கு எஸ்டிபிஅய் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த அகவை தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் சுகுமார் பாலகிருஷ்ணன்

இன்று பிறந்தநாள் காணும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களின் வாழ்வும் தொண்டும் நூற்றாண்டு கடந்தும் தொடர வேண்டும் என அவரது 89ஆவது பிறந்தநாளில் வாழ்த்தி வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு. மாநில செய்தி தொடர்பு

இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி

தி.மு. மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏட்டுக்கல்வி சொல்லி தராத சமூகநீதி பாடத்தினை தமிழர் வாழ்வியல் கல்வியாக தன் வாழ்நாள் முழுவதும் போதிக்கும் ஆசிரியர்  அவர்களுக்கு,

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

No comments:

Post a Comment