மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகள்

முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, டிச.4 மாற்றுத்திறனாளி களின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார்.

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி களின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில விருது களை முதலமைச்சர் மு..ஸ்டாலின் 3ஆம் தேதி (நேற்று) வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த முறையில் சேவைபுரிந்ததற்காக சிறந்த சமூகப் பணியாளர் விருதை ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவன், சிறந்த நிறுவ னத்திற்கான விருதை விருதுநகர் மாவட் டம் சப்தகிரி மறுவாழ்வு அறக் கட்டளை, சிறந்த ஆசிரியருக்கான விருதை செவித் திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்த தற்காக ஜெயந்தி, பார்வை குறைவுடை யோருக்கு கற்பித்ததற்காக மாரியம்மாள்,

சிறந்த பணியாளர்-சுயதொழில் புரிபவர் விருதை மாதேஸ்வரன், ரேவதி மெய்யம்மை, ராஜா, தங்ககுமார், ஜோயல் ஷிபு வர்க்கி, அப்துல்லத்தீப், அனுராதா, சரண்யா, கணேஷ் குமார், ஆரம்பநிலை பயிற்சி மய்யத்தில் பணி புரியும் சிறந்த ஆசிரியருக்கான விருதை முத்துச்செல்வி மற்றும் சர்மிளா, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநருக்கான விருதை ரதீஷ், நடத்துநருக்கான விருதை திருவ ரங்கம் ஆகியோருக்கு முதலமைச்சர் வழங்கி பாராட்டினார். அவர்களுக்கு தலா 10 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கப்பதக்கமும், பாராட்டுச் சான்றி தழும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் முதன்முதலாக தொழுநோயால் பாதிப்படைந்தவர் களின் மறுவாழ்விற்காக பரனூரில் 1971ஆம் ஆண்டு  காந்தியார் பிறந்த நாளன்று மறைந்த முன்னாள் முதல மைச்சர் கலைஞரால் அரசு மறுவாழ்வு இல்லம் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

உணவு, உறைவிடம், உடுக்க உடை, மருத்துவ வசதிகள் இல்லவாசிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இல்ல வாசிகளுக்கு பாய் நெய்தல், துணி நெய்தல், தையல் மற்றும் காலணி தயாரிப்பு போன்ற பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்படுவதுடன் அவர் களால் தயாரிக்கப்படும் பொருட்களுக் கேற்ப ஊதியமும் வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மல்லவாடியில் அரசு மறுவாழ்வு இல்லம் 1973ஆம் ஆண்டு 425 பயனா ளிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டது. இதற்கான கட்டடம் மிகவும் பழுத டைந்து மோசமான நிலையில் இருந் தது. இல்லவாசிகளின் நலன் கருதியும், அவர் களின் பயன்பாட்டிற்காகவும், மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத் திற்கு கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல மைச்சர் திறந்து வைத்தார். இந்த மறு வாழ்வு இல்லத்தில் 40 பேர் தங்கும் வகை யில் 20 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.

பணிநியமன ஆணை

மாவட்ட மய்ய நூலகங்கள் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாகவுள்ள நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங் களுக்கு பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மய்யத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த பார்வை குறைவுடையோருக்கு சிறப்பு நேர்வாக நூல் கட்டுநர் பணியிடத்திற்கு 17 பேருக்கும், நூல் கட்டும் உதவியாளர் பணியிடத்திற்கு 14 பேருக்கும், என மொத்தம் 31 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாள மாக முதலமைச்சர் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment