தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா - குருதிக் கொடை -மனிதநேய பெருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 4, 2021

தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா - குருதிக் கொடை -மனிதநேய பெருவிழா

திருச்சி, டிச.4 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர்தமிழர் தலைவர்  டாக்டர் கி. வீரமணி  அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளான 02.12.2021 அன்று காலை 10 மணியளவில்  நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார். தமிழர் தலைவர் நிறுவனத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை மனிதநேய விழாவாக கொண்டாடும் பொருட்டு குருதிக்கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவசரகாலங்களில் உயிர்காக்கும் பொருட்டு கொடுக்கப்படும் குருதிக் கொடையின் போது ஜாதி, மத பேதங்கள் பார்ப்பது கிடையாது. தற்போது கண்தானம், குருதிக் கொடை என்பதைக்கடந்து மறைவிற்குப்பிறகு உடல் உறுப்பு தானம், உடற்கொடை என்ற அளவிற்கு மனிதநேயம் வளர்ந்துவிட்டது. இதனால் தமிழ்நாடு உறுப்புதானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும் இதற்கு அடித்தளமிட்டவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் என்றும் உரையாற்றினார்இம்முகாமில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் . வளர்மதி மற்றும் மருத்துவக்குழுவினர் குருதிக்கொடை முகாமினை நடத்தி மாணவர்களுக்கு குருதிக் கொடையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். பேராசிரியர் முனைவர் .மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர்  கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த  இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் குருதிக்கொடை வழங்கி சிறப்பித்தனர். முன்னதாக காலை 9 மணியளவில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. இதில் சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள் மற்றும் பேராசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.   

No comments:

Post a Comment