இலக்கினின்று வழுவாத தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

இலக்கினின்று வழுவாத தலைவர்

சமூக மாற்றத்தின் காரணியாய் - மக்கள்

சமநீதி பெறவேண்டிப் போராடும்

சமகாலத் தலைவரே வீரமணி! - பெரியார்

சிந்தனைப் பட்டறையில் புடம்போட்ட

சொக்கத்தங் கம்எனில் மிகையில்லை!

எவ்வுயிரும் தம்முயிராய் எண்ணுகிற - ஆசிரியர்

இலக்கினின்று வழுவார்; வாழ்த்துகள்!

வஞ்சம் பொய் களவுக் கிரையாகி - அவர்

வாழ்நாளை வீணாக்க விரும்பவில்லை;

பொன்பொருளுக் கலையாமல் நாளெல்லாம் - அவர்

புத்துணர்வு பெறுவதும் தொண்டாலே!

கண்மூடித் தனத்துக்குப் பகையாகி - சுய

கட்டுப்பா டுடன்கடமை ஆற்றுகிறார்;

பேசுவதும் எழுதுவதும் நடைமுறையில் - கண்ட

ஆசிரியரை உளமார வாழ்த்துகிறேன்!

- பட்டுக்கோட்டை தமிழ்அன்பன்

இளைப்பாறிய பேராசிரியர்

No comments:

Post a Comment