திராவிட தமிழினத்தின் அரணாய் நூற்றாண்டு கடந்தும் வாழ்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

திராவிட தமிழினத்தின் அரணாய் நூற்றாண்டு கடந்தும் வாழ்க!

வசைபாடிய வஞ்சகக்கூட்டமும்

வசதியாய் வாழ்ந்திடவே

வயது 94வரை பாடுபட்ட தந்தை பெரியாருக்குப்பின்

தமிழினத்தைக் காக்க யார்தான் உண்டு!

திராவிட இனத்தின் வரலாறு தெரிந்தவருண்டா!

வரலாற்றை திரிப்பவரின் குள்ளநரி குணம் அறிந்தவர்தான் உண்டா!

கல்வியிலே கரைசேரும் வேலைவாய்ப்பினிலே

தகுதியென்றும் திறமையென்றும் பேதம்பார்த்து

வாய்ப்பினையே தரமறுக்கும் ஆரிய சூழ்ச்சியினை

அடையாளம் காட்ட யார்தான் உண்டு!

அனைவருக்கும் அனைத்தும் என்று

அய்யாவின் அடிச்சுவட்டில் அயராது பயணிக்கும்

அய்யா உங்களைத் தவிர வேறு யார்தான் உண்டு!

திராவிட தமிழினத்தின் அரணாய்

நூற்றாண்டு கடந்தும் நீவீர் வாழ்க!!

 முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள்

பெரியார் மருந்தியல் கல்லூரி

திருச்சி - 21.

No comments:

Post a Comment