நான் பெற்ற பேறு!
1. நான் சமூகத் தொண்டு செய்யும் இயக் கப் பணிகளில் ஈடுபட்டபோது, ஒருபோதும் மான அவமானம், புகழ், நன்றி, பெருமை - சிறுமை பார்ப்பதே இல்லை - ஓட்டப் பந்தயத் தில் ஓடுகிறவனுக்கு இலக்கு மட்டும்தானே குறி, அதுபோல!
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
2. நான் எவரையும் ஏமாற்றாத எளிமை வாழ்வு, எண்ணற்ற கூட்டுத் தோழர்களின் நல் வாழ்வுபற்றிய - சுயமரியாதை உலகை உரு வாக்க எதையும் இழக்கத் தயாராக என்றும் உழைப்பேன்.
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
3. எனக்கு எடுத்த காரியம் - தொடுத்தது நியாயமான போரா இல்லையா என்பதுதான் நோக்கே தவிர, வெற்றி கிட்டுமா? தோல்வி வருமா? என்று முன்கூட்டியே யோசித்துத் தயங்கத் தெரியாத லட்சியப் பயணக்காரன்.
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
4. பதவிகளையும், படாடோபத்தையும், பாராட்டுப் பெருமைகளையும் என்றும் எதிர் பார்த்து பொதுவாழ்வில் உழைப்பவன் அல்ல; முழு மனநிறைவுடன் அக்கடமைகளை நாளும் நிறைவேற்றிட தயக்கமில்லாத அறப்போர் வீரன்.
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
5. என்றும் என் தகுதிக்கு மீறி வாழத் தெரி யாதவன் மட்டுமல்ல - வாழத் தெரியாத வனும்கூட!
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
6. பெரிதும் முட்டாள்கள், மூர்க்கர்கள் கொண்ட சமூகத் தில் 'நல்ல பெயர்' எடுக்க விரும்பாதவன். அவர்களிடம் 'கெட்ட பெயர்' எடுப்பதே சிறந்தது என்று நினைப்பவன்!
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
7. மற்ற பற்றுக்களிலிருந்து விடுபட்டு, மனிதப்பற்று அறிவுப்பற்று, வளர்ச்சிப்பற்று பற்றியே நாளும் சிந்தித்து எழுதவும், பேசவும், செயல்படவும் முனைவதில் இன்பங் காண்பவன்.
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
8. ஜாதி, பெண்ணடிமை ஒழிப்பு, பாலியல் வேற்றுமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி சிந்தனை போன்ற பகுத்தறிவுக்கு இடந்தந்து அடிமைத்தளையை உடைத் தெறிய நாளும், நாளும் உழைப்பவன்.
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
9. சுதந்திரங்களில் எல்லாம் தலையாயது அறிவுச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் - கேள்வி கேட்டு விடை தேடும் அஞ்ஞானம், சுதந்திரம் இவையே என்று எண்ணி, அதற்கு ஆபத்தும், தடையும் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுவதில் தனி இன்பம் காண்பவன்.
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
10. எதையும் இலவசமாகப் பெறுவதைவிட, உரிய விலை கொடுத்துப் பெற்று மகிழ்வதே சீரிய சுயமரியாதை சுக வாழ்வு என்று கருது பவன்; நல்ல லட்சியங்களை அடைய கஷ்ட நஷ்டங்கள் என்ற உரிய விலையைக் கொடுத் துப் பெறுவதே முறை என்பதால், எத்துணை இடர்களையும், இடுக்கண்களையும் ஏற்கத் தயாராக என்றும் இருக்கும் மனப்பக்குவம் பெற்றவன்.
காரணம்,
நான் பெரியாரின் வாழ்நாள் மாணவன்.
No comments:
Post a Comment