15ஆம்தேதி வரை நீட்டிப்பு
சென்னை, டிச.2 தமிழ்நாட்டில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டு, கரோனா நோய்த்தொற்று கட்டுப் பாடுகள் 15ஆம்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா பெருந் தொற்று பரவியதை தொடர்ந்து, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம்தேதியன்று தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அதிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றின் அளவையடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. என்றாலும், ஊரடங்கு உத்தரவு இந்நாள் வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக் கப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதத்தில் தினசரி தொற்றின் அளவு 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 720 (நேற்றைய நிலவரம்) என்ற அளவிற்கு குறைந்து வந்துள்ளது. எனவே கட்டுப்பாடுகளிலும் பல் வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அளித்துக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பிறப்பிக்கப் பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, 30ஆம்தேதியுடன் முடிவடைந்து விட்டது.
15ஆம்தேதி வரை நீட்டிப்பு
அதைத்தொடர்ந்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில், கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப் படுத்தும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணைப்படி 30.11.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்ச கத்தால் 30.11.2021 நாளிட்ட கடிதத் தில், கரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. எனவே கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர் மழை பொழிந்து வருகின்ற சூழ் நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடை முறையில் உள்ள ஊரடங்கு கட்டுப் பாடுகள் 15-.12-.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.
கேரளாவுக்கு பொது போக்குவரத்து
ஏற்கெனவே ஆந்திரபிரதேசம், கருநாடகா மாநிலங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது, அதைப்போன்று கேரள மாநிலத்திற் கும் பொது போக்குவரத்து அனு மதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறை களை பின்பற்ற வேண்டும். அதன் படி, கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப் பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப் படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
தொற்று கட்டுப்பாட்டு வழிமுறைகள்
நோய்த்தொற்றுக்கு உள்ளான வர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண் டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப் பூசி செலுத்துதல் மற்றும் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக் கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடை முறைப்படுத்தப் படும். கரோனா நோய்த்தொற்று பர வலை தடுப்பதற்கு, நோய்த்தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க்கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்தடுப்பு நடவடிக் கைகளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிகள்
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், சில நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். அதன்படி, அந்த பகுதி களில் அத்தியாவசிய செயல் பாடு களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட வேண்டும். மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியா வசிய பொருட்கள் வழங்குதல் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment