டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· 2022ஆம் ஆண்டு முழுவதும் மோடி அரசை எதிர்த்து போராட்டம் நடத்திட தெலுங்கானா டி.ஆர்.எஸ். கட்சி முடிவு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
· தணிக்கை, கணக்கியல் தேர்வில் இந்தி தெரியாத மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டுவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் குற்றச் சாட்டு.
· பொது சுகாதாரத்துறை செயல்பாட்டில் நாட்டிலேயே பாஜக ஆளும் உ.பி. கடைசி இடம். கேரளம் முதல் இடம்; தமிழ்நாடு 2ஆவது இடம் என நிட்டி ஆயோக் அறிவிப்பு
தி டெலிகிராப்:
· அய்அய்டி காரக்பூர் வெளியிட்டுள்ள 2022 ஆம் ஆண்டு காலண்டரில், ‘ஆரியப் படையெடுப்பு’ கோட் பாடு பற்றிய குறிப்புகள் இந்திய விஞ்ஞானிகளை குழப்பு கிறது. 2022 காலண்டரின் பிப்ரவரி பக்கம், ‘ஸ்வஸ்திகா’வின் சுழற்சி மற்றும் நேரியல் அல்லாத வடிவங்களும், ஆரிய ரிஷிகளின் கால அம்பும் சிந்து சமவெளி முத்திரைகளில் தெளிவாகத் தெரிகிறது’ என்று கூறுகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் குழு, ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 40 ஜாதிகளை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளது.
· உ.பி. மாநிலம் சுகாதாரக் குறியீட்டில் கடைசி இடம் என்பதுதான் பாஜக அரசின் உண்மையான அறிக்கை என அகிலேஷ் சாடல்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment