சென்னையில் கரோனா நோயாளிகளுக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியும் பரிசோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 5, 2021

சென்னையில் கரோனா நோயாளிகளுக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியும் பரிசோதனை

சென்னை, டிச.5 சென்னையில் கடந்த 2 வார காலத்தில் கரோனா வால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியும் ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை 5 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. 

ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தொடர்ந்து, சுகாதாரத் துறை சார்பில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வருபவர்களை தீவிரமாக கண் காணிக்கும் பணி மேற் கொள்ளப் படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய அவர்களது மாதிரிகள் சென்னை, புனே, பெங்களூருவில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 150 படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத் துவமனையில், கிண்டி கிங்ஸ் மருத் துவமனையிலும் தனி படுக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட் டுள்ளது.

பரிசோதனை ஆய்வகம்

ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையில் ஒமைக்ரான் வைரசுக்கு சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை பிரிவு (அய்.சி.யு) படுக்கைகள் நேற்று (4.12.2021) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல், ஒமைக் ரான் தொற்று பாதிப்பு அறிகுறியை கண்டறியும் டேக்பாத் பரிசோதனை ஆய்வகமும் பயன்பாட்டுக்கு வந்தது.

இதுகுறித்து தலைமை மருத் துவர் தலைவர் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களில் சந்தேகத்துக்குரிய நபர் களின் மாதிரிகளில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அறிகுறி இருக் கிறதா? என்பதை கண்டறியும் டேக்பாத் ஆய்வக பரிசோதனை நடந்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரி களை பரிசோதனை செய்யும் போது, ஒமைக்ரான் அறிகுறி உறுதி செய்யப் பட்டால், அடுத்தகட்டமாக அதனை மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என உறுதி செய்யப்படும்.

முகக் கவசம் கட்டாயம்

டேக்பாத் பரிசோதனை ஆய்வகத்தில் பரிசோதனை முடிவு 4 முதல் 6 மணி நேரத்தில் தெரியவரும். தற்போது, ஓமந்தூரார் மருத்துவ மனையில் இந்த பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பை தடுக்க பொது மக்கள் கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment