மத்தூர் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக செயலா ளரும்,ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் புரவலரும், மேனாள் ஒன்றிய குழுத் தலைவரும் குணா மெட்ரிக்குலேசன் பள்ளியின் நிறுவனரும் சீரிய பகுத்தறிவாளருமான பொன்.குணசேகரன் மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
தந்தை பெரியார், முத்தமிழ் அறிஞர் கலைஞர் , தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தளபதி மு.க ஸ்டாலின் ஆகியோர் மேல் மாறா பற்றுக்கொண்டு கருஞ்சட்டை அணியாத பெரியார் தொண்டராய் வலம் வந்தவர். திராவிடர் கழக தோழர்கள் மேல் அளவற்ற அன்பைப் பொழிந்தவர். மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக தோழர்களுக்கு பாதுகாப்பு அரண் போல் இருந்தவர்,மத்தூர் நகரில் தந்தை பெரியார் சிலை அமைய கழகத் தோழர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவியவர். அவரின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment