சமூக நீதிக்கும் சம நீதிக்கும் ஓய்வின்றி தொடர்ந்து போராடும் போராளி திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 2, 2021

சமூக நீதிக்கும் சம நீதிக்கும் ஓய்வின்றி தொடர்ந்து போராடும் போராளி திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பாராட்டு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி யின் 89ஆவது பிறந்த தினத்தையொட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டு உள்ளதாவது: -

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தமது 89ஆவது அகவை யில் பயணத்தை 2.12.2021 தொடர்கிறார் என்பது மிகுந்த வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும்.

தமிழர் தலைவர், சுயமரியாதைச் சுடர், பெரியாரின் தலைமைச் சீடர், தமிழ் இனம், மொழி, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றின் கருவூலம், உலக அறிஞர்கள் போற்றும் பகுத் தறிவுப் பெட்டகம், சமூக நீதிக்கும் சம நீதிக் கும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தொடர் போராட்டம் நடத்தும் போராளி என்று அவ ரைப் போற்றுவதற்கு எண்ணற்ற அடை மொழிகள் குவிந்த வண்ணமாகவே இருக் கின்றன.

பகுத்தறிவுப் பகலவன் என்று வரலாறு போற்றும் பெரியார் அவர்களின் எண்ணம், சிந்தனை, கொள்கை, கோட்பாடு, சீர்திருத்தம், போர்க்குணம்யாவும் பெரியாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் நீடிக்குமா? நிலைக்குமா? தொடருமா? தொண்டாற்றுமா? என்று நினைத்தவர்கள் உள்ளனர். அந்த நினைப்பு, வரலாற்றில் அன்றாடம் தொடர்கின்ற நிகழ்வுகளாகியுள்ளன என்றால், அதைச் செம்மை யாகச் செய்யும் செந்நெறி வித்தகர் வீரமணி அவர் களையே சாரும்.

பெரியார் அவர்கள் உலகில் பல நாடு களுக்குச் சென்றார் அங்கிருந்து கற்றும் பெற்றும் வந்ததை தமிழருக்குத் தந்தார் தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் நலத்துக்கும் மேன் மைக்கும் பாடுபட்டார்; மூடப்பழக்க வழக்கங் களை சாடினார்; மதத்தின் பேரால் - எந்த மதமாக இருந்தாலும் மக்களைப் புன்மைய டையச் செய்ததை எதிர்த்துப் போராடி மனி தனை மனிதனாக வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார் பெரியார்.

தமிழ்நாடு வரலாற்றில் ஏன், இந்திய சரித் திரத்தில் நீக்கமுடியாத இடம்பெற்று திகழ் கிறார்.

பெரியாரியக் கொள்கைகளையும் தத்து வங்களையும் டில்லிப் பட்டணத்தில் பர விடவும், இந்திய மாநிலங்களில் அவரின் கருத்தோட்டம் ஏற்பட வும், எல்லாவற்றுக்கும் மேலாக உலகநாடுகளில், குறிப்பாக மேற்கத் திய ஜனநாயக பூமிகளில் பெரியா ரின் தனிச் சிறப்பை விளக்கும் மாநாடுகள், கருத்தரங்குகள் ஆய் வரங்கங்கள் நடத்தியும் பெரியாரின் உண்மையான சீடர்-தலைமைச் சீடர் தன்னிகரற்ற சீடர் என்பதை நிரூபித்து வருபவர் மானமிகு அய்யா கி.வீரமணி அவர்களே ஆவார்கள்.

பெரியாரியத்தை இன்றைய உலக அளவில் வியாபிக்கச் செய்து, உலகில் சிறந்த பகுத்தறிவாளர்களின் பாசறையில் முன்னணி யில் பெரியாரின் பேரையும் புகழை யும் ஏற்றிவைத்த பெருமை அய்யா வீரமணிக்கே சேரும்.

எல்லாவற்றுக்கும் மேலாக திருச்சிக்கு அருகே வீரமணியார் உருவாக்கி வரும்பெரியார் உலகம்உலகுள்ளளவும் பெரியா ரின் முற்போக்கு மனிதாபிமான செந்நெறியை பரப்பும்! நிலையா வையகத்தில் பெரியாரின் புகழ் நிலைத்திருக்கச் செய்யும்! தமிழ்நாட்டில் எல்லா சமுதாயங்களுக்கும் தலை வராகத் திகழ்ந்து, மாறாப் புகழுக்குரியத் தலைவராக விளங்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அய்யா வீரமணி அவர்களைஇளவல்என்றே அழைப்பார்.

அந்த அய்யா வீரமணி அவர்கள் தனது எண்ணத்தாலும், செயல் வேகத்தாலும், அறத் தொண்டாற்றும் துரிதத்தாலும் இன்றும் தமிழ் மக்களுக்குஇளவல்ஆகவே காட்சி அளித்து வருகிறார்.

கலைஞரின் வாரிசு-தமிழ் சமுதாயம் பெற்ற தவப்புதல்வர் தளபதி மு.. ஸ்டாலின் அவர்களின் இந்த நல்ல பொற்கால ஆட்சியில் அய்யா அவர்களுடன் நாமும் வாழ்கிறோம் என்றெண்ணி மகிழ்கின்றோம்.

இன்றைய காலத்தில் 89 என்பது பெரிய வயது ஆகாது. நூற்று அய்ம்பது வயதில் ஓடி ஆடி செயல்படும் மக்கள் வாழும் காலம் இது. அய்யா வீரமணி அவர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற இலக் கணத்திற்« கற்ப அவர்காட்டும் வாழ்வியலை இன்னும் பல்லாண்டு காலத்திற்கு நமக்கு வழி காட்ட வேண்டி வாழ்த்துவோம்! வாழ்த்திப் பாராட்டுவோம்!

இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.

No comments:

Post a Comment