மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 29, 2021

மறைவு

கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் ஜம்பை கிளைக் கழகச் செயலாளர் வை.சந்திரசேகரின் தாயார் வை. சாரதாம்பாள் நேற்று (28-12-2021)  அன்று 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.

தகவல் அறிந்ததும் மாவட்டத் தலைவர் .சுப்பராயன் தலைமையில், திருக்கோவிலூர் ஒன்றிய கழகத் தலைவர் கருப்புச்சட்டை ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் தேவரடியார் குப்பம் மு.இளங்கோவன், வடகரை தாழனூர் கிளைக் கழகத் தலைவர் சேகர், மணலூர்பேட்டை நகர  கழகத் தலைவர் சி.அய்யனார், மணலூர்பேட்டை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.சக்தி, முருக்கம்பாடி கிளைக் கழகத் தலைவர்  மா.கணபதி, ஜம்பை கிளைத் கழகத் தலைவர் .தமிழரசன் ஆகியோர் சென்று மலர் வளையம் வைத்து இரங்கலுரை ஆற்றி வீர வணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment