காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உறுதி
புதுடில்லி, டிச.29 இந்திய ஜனநாயகத்துக்கு அச்சு றுத்தலாக இருக்கும் ஜனநாயக விரோத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 137 ஆவது நிறுவன நாளை முன்னிட்டு கட் சித் தொண்டர்களுக்கு சோனியா காந்தி காணொலிக் காட்சியில் தன் உரையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப் பதாவது:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காத வெறுப்பு மற்றும் தவறான எண்ணங்கள் மேலோங்கிய பிளவு ஏற்படுத்தும் ஒரு சித்தாந்தம் இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பில் சேதத்தை ஏற்படுத்து கிறது. தங்களுக்கு தகுதியில்லாத ஒரு பாத்திரத்தை தங்களுக்கு வழங்குவதற்காக வரலாற்றை மாற்றி எழுதுகிறார்கள். அவை உணர்ச்சியைத் தூண்டுகின்றன. பயத்தை ஏற்படுத்துகின்றன. பகை மையை பரப்புகின்றன.
மேலும் நமது நாடா ளுமன்ற ஜனநாயகத்தின் சிறந்த மரபுகள் வேண்டுமென்றே சேதப் படுத்தப்படுகின்றன. தேர் தலில் வெற்றியும் தோல்வியும் தவிர்க்க முடியாதவை.
20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த, உன்னதமான, தன்னல மற்ற இந்தியர்களால் வடிவமைக்கப்பட்ட, வழி நடத்தப்பட்ட நமது கட்சியின் லட்சியங்கள், விழுமியங்கள் மற்றும் கொள்கைகளுக்கு நம்மை மீண்டும் அர்ப் பணித்துக் கொள்வோம். இந்திய ஜனநாய கத்துக்கு அச்சுறுத்துலாக இருக்கும் அழிவு சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடும்.
இவ்வாறு சோனியா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment