வர்ணாசிரம மாநாட்டின் கேலிக் கூத்து 14.10.1944 -குடிஅரசிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

வர்ணாசிரம மாநாட்டின் கேலிக் கூத்து 14.10.1944 -குடிஅரசிலிருந்து...

சிதம்பரத்தில் 8.10.1944 முதல் 11.10.44 வரை நடக்கவிருந்த வர்ணாசிரம மாநாடு 8.10.44இல் ஒரு நாள் மட்டும் அதுவும் 3 மணி நேரத்தில் நடந்து முடிந்தது.

குறிப்பிட்ட தலைவர் தோழர்கள் பராண்யும், சீனிவாச அய்யங்காரும் வரவில்லை. இம்மாநாடு குறித்து 7.10.1944இல் ஊர்வலத்துடன் பொதுக் கூட்டமும், 8.10.44இல் காலை ஊர்வலமும், 11.10.1944இல் தேதி பொதுக்கூட்டமும் திராவிடர் கழகத்தார் நடத்தப் போவதாய் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

சிதம்பரம் ஸ்டேஷனரி சப்மாஜிஸ்திரேட் திராவிடர் கழகத்தாருக்கு 7.10.1944 முதல் ஒரு மாதத்திற்குத் தடையுத்தரவு விதித்தார்கள். பின் திராவிடர் கழக முயற்சிகண்ட வர்ணாசிரமிகள் ஒரு விதமான ஊர்வலமும் இல்லாமல் அகில இந்திய வருணாசிரம சுயராஜ்ய மாநாடு என்ற பெயரில் ஒரு கோவிலினுள் கூடினார்கள். கூட்டம் சுமார் 120 பேர் இருக்கும். அவற்றில் 20 பேர் அவர்கள் நடவடிக்கையைக் காண விபூதி பூசிக் கொண்டு சென்ற நமது இயக்கத் தோழர்கள்.

தலைவர் முன்னுரை ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டதாலும், பேச்சாளர்கள் பலர் இடை இடையே சமஸ்கிருத சொற்களைப் பேசினதினாலும், தமிழே சரியாகப் பேசத் தெரியாததாலும் அங்கு இருந்த கூட்டமும் சிறிது சிறிதாகக் கலைந்து கொண்டேயி

ருந்தது.

இவ்வளவு அழகாகக் கூடிய அகில இந்தியக் கூட்டத்திற்கு சுதேசமித்திரன் பத்திரிகை போன்ற பத்திரிகைகள் பத்தி பத்தியாய் இடமளித்துள்ளது. இது பார்ப்பனப் பித்தலாட்டமென மக்கள் பேசிக் கொள்கிறார்கள். 

No comments:

Post a Comment