தமிழ்நாடு முதலமைச்சர் தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும்: பகுத்தறிவு ஆசிரியர் அணி கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும்: பகுத்தறிவு ஆசிரியர் அணி கோரிக்கை

தருமபுரிகிருஷ்ணகிரி, ஒசூர் கழக மாவட்டங்களின்  பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தருமபுரி, ஜன. 5- 2.1.2022 ஞாயிறு காலை 10 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் கழக மாவட்டங் களின் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரை யாடல் கூட்டம் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர்  தமிழ் பிரபாகரன் தலை மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தருமபுரி திராவிடர் கழக மண்டலத் தலைவர்  .தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர்  மு.பரமசிவம், ஒசூர் மாவட்ட தலைவர்  சு.வனவேந்தன், தருமபுரி மாவட்டச் செயலாளர்  .மு.யாழ்திலீபன், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட செயலாளர்  .அண்ணாதுரை, மாவட்ட அமைப்பாளர்  மு.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார். பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்  இரா.சிவக்குமார் கலந்துகொண்டு தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர்  ஊமை.ஜெயராமன் அறிமுகவுரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலை வர்  அண்ணா.சரவணன், பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர்  மாரி. கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர். நிகழ்வின் தொடக்கத் தில் கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரி யரணி தலைவர்  .லூயி சுராஜ் வரவேற்று உரையாற்றினார்.

தீர்மானம் 1   இரங்கல் தீர்மானம்

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணை தலைவர், பெரியார் பெருந்தொண்டர் ராஜகிரி கோ.தங்கராசு, ஒசூர் விஜயமாயாண்டி, பெரியார் சுப்பிரமணியன், மத்தூர் அரங்க. இரவி, ஆலமரத்துப்பட்டி துரைராஜ், கிருஷ்ணகிரி ஒன்றிய தலைவர் மாது அவர்களின் தாயார் ரஞ்சிதம் ஆகி யோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங் கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2

தை 1ஆம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு அறிவிக்க பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ் அறிஞர்கள் விடுத்த கோரிக்கையின் படியும், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்கள் அறிவித்தபடியும் தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு  அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3

பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்ற மேனாள் மாணவர்களின் பெயர் பட்டியல், முகவரிகளை சேகரித்து, அவர் களை பகுத்தறிவு ஆசிரியரணியில் உறுப்பின ராக்குதல் என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4

ஒவ்வொரு மாதமும், மாதம் ஒரு முறை பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையில் மாதாந்திர கருத்தரங்கத்தினை தொடர்ந்து நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5

தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் கழக மாவட்டங்களில் மண்டலம், மாவட்டம், ஒன் றியம், நகரம் வாரியாக புதிய பொறுப்பாளர் களை நியமித்து பகுத்தறிவு ஆசிரியரணியை வலுவாக கட்டமைப்பது என முடிவு செய் யப்படுகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

தருமபுரி மண்டல பகுத்தறிவு ஆசிரிய ரணி அமைப்பாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி,

தருமபுரி மாவட்டம்

தருமபுரி ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் - தமிழ்மணி, நல்லாம்பள்ளி ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்  - துரை.கருணாகரன், பென் னாகரம் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் - ராஜ்குமார், காரிமங்கலம் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் - .மணிவேல், காரிமங்கலம் ஒன்றிய பகுத் தறிவு ஆசிரியரணி செயலாளர் - எம்.சிவ சண்முகம், காரிமங்கலம் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் - டி.செல்வக் குமார், பாலக்கோடு காரிமங்கலம் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் - குமார், மொரப்பூர்  ஒன்றிய பகுத்தறிவு ஆசிரி யரணி  தலைவர் - .புஷ்பராஜ், மொரப்பூர்  ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் - இராஜேந்திரன், மொரப்பூர்  ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் - பா.சுந்தர்ராஜன், அரூர் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் - வே.இராவணன், அரூர் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி செய லாளர் - சி.செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் - .ஜீவிதா, பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் - மு.சிலம்பரசன், பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் - சி.அன்பரசு, கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் - கோ.கோவிந்த சாமி

ஒசூர் மாவட்டம்

ஒசூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் - ஞானசுந்தரி செயச்சந்திரன்,

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி ஒன்றிய பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் - இரா.இராமசுந்தர், பர்கூர் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் - சிவராமன், வேப்பணபள்ளி ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் - .கிருஷ்ணவேல், காவேரிபட்டினம் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் - தி.அன்புச்செழியன், மத்தூர் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் - பொன்.சிவக்குமார், மத்தூர் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் - திருநாவுக்கரசு, ஊற்றங்கரை ஒன்றிய பகுத்தறிவு ஆசிரி யரணி தலைவர் - இராம.சகாதேவன், ஊற் றங்கரை ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் - ஜெ.திருநாவுக்கரசு.

கலந்துகொண்டவர்கள்

மண்டல திராவிடர் கழக தலைவர் .தமிழ்செல்வன், ஒசூர் மாவட்ட கழக தலைவர் சு.வனவேந்தன், மாநில மகளிரணி செயலா ளர் தகடூர். தமிழ்செல்வி,  கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் இரா.பழனி, திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சு.ஆறுமுகம், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் நெல்லுப்பட்டு வே.இராஜவேல், திருவாரூர் மாவட்ட இளைஞ ரணி தலைவர் பிளாட்டோ, மாவட்ட மாண வர் கழக அமைப்பாளர் .பூபதிராஜா, விடு தலை வாசகர் வட்ட தலைவர் .சின்னராஜ், ஆசிரியர்கள் இரா.கிருஷ்ணமூர்த்தி, .மணி வேல், மு.பிரபாகரன், .சாமிநாதன், பழனி யப்பன், .அண்ணாதுரை, தீ.சிவாஜி, கதிர்.செந்தில்குமார், .வினோத்குமார், மகளிர் பாசறை ஒசூர் மாவட்ட தலைவர் கண்மணி, மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப் பாளர் .கா.வெற்றி, பெரியார் பிஞ்சுகள் .கி.வீரமணி, .கி.செம்மொழி அரசு, .கா.சித்தாந்தன் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்  கதிர்.செந்தில்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment