கட்டுமான தொழில்துறையில் விரிவாக்க சிறப்புத் திட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

கட்டுமான தொழில்துறையில் விரிவாக்க சிறப்புத் திட்டங்கள்

சென்னை, ஜன. 5- தென்னிந் தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பரான காசாகிராண்ட், இந்திய ரியல் எஸ்டேட் தொழில் துறையில் 17 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதை மகிழ்ச்சி யுடன் கொண்டாடுகிறது.

சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 30 மில் லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் முதன்மையான குடியி ருப்பு அமைவிடங்களை இந்த பிராண்டு இதுவரை உருவாக்கியிருக்கிறது. மேற்கண்ட இந்த மூன்று பெருநகரங்களிலும் இது வரை 110க்கும் அதிகமான  குடியிருப்பு இல்ல செயல் திட்டங்களை இந்நிறுவ னம் வெற்றிகரமாக உரு வாக்கி குடியிருப்பாளர் களுக்கு வழங்கியிருக்கிறது. 18,250க்கும் அதிகமான மகிழ்ச்சியான குடும்பங்க ளுக்கு தரமான, சிறந்த குடியிருப்பு அமைவிடங் களை இதுவரை வழங்கி யிருக்கும் காசாகிராண்ட், வாடிக்கையாளர்களது கனவு இல்லங்களை நிஜ மாக்கும் தனது பயணத்தில் தளர்வில்லாத முயற்சி களை மேற்கொண்டு இன் றைக்கு ரியல் எஸ்டேட் துறையில் பெருநிறுவன மாக வளர்ந்திருக்கிறது என காசாகிராண்ட்டின் நிர்வாக இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment