பாரீஸ், ஜன. 4- பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரை அடிப் படையாக கொண்ட "எல்லைகள் இல்லா நிருபர்கள்" என்ற பன்னாட்டு அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை வெளி யிட்டு உள்ளது. அதில், தங்களுடைய பணிகளின் நிமித்தம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் 488 பத்திரிகையாளர்கள் கைது செய்யப் பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆவணப் பதிவு நடந்து வருகிறது. எனினும், இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக, கடந்த 2021ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிக அளவில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவற்றில், சீனா (127) முதல் இடம் வகிக்கிறது. இதனை தொடர்ந்து, மியான்மர் (53), வியட்னாம் (43) மற்றும் பெலாரஸ் (32) ஆகியவை உள்ளன. உலகம் முழுவதும் சர்வாதிகார போக்கின் பிரதிபலிப்பு இது என்று அந்த குழுவின் பொது செயலாளர் டெலாயர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment