அபுதாபி, ஜன. 4- உலகம் முழுவதும் பல நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. புதிய வகை கரோனாவான ஒமைக்ரானும் அதிவேகத் தில் பரவி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலை தடுக்க கடுமை யான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில் அய்க் கிய அரபு அமீரகத்தில் கரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத் திக் கொள்ளாத நபர்கள் வெளிநாடுகளுக்கு பய ணம் மேற்கொள்ள தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த தடை வருகிற 10-ஆம் தேதி முதல் அமலுக்கும் வரும் என அந்த நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
எனினும் தடுப்பூசி பெறுவதில் இருந்து மருத் துவ ரீதியாக விலக்கு பெற்றவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்த புதிய கட்டுப்பாடுகளால் பாதி க்கப்படமாட்டர்கள் என்றும் குடிமக்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அரசின் உத்தர வில் கூறப்பட்டுள்ளது.
அய்க்கிய அரபு அமீர கத்தில் 90 சதவீதம் பேர் கரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி (2 டோஸ்) பெற்றுள்ளனர் என்றும், கடந்த மாதம் 24-ஆம் தேதி வரையில் 34 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண் டுள்ளனர் என்றும் புள்ளி விவர தகவல்கள் தெரிவிக் கின்றன.
No comments:
Post a Comment