நியூயார்க், ஜன. 4- தென் ஆப்பிரிக்காவில் கண்டறி யப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் வேகமா கப் பரவத் தொடங்கியுள் ளது. இதனால் குறைந்து வந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், டெல்டா உள்ளிட்ட கரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரா னின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஜப்பானைச்சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகள் மீது ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.
அதில் ஒமைக்ரான் தொற்று மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, எடை குறைவு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட் டது.
கரோனாவின் பிற உரு மாறிய வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் எலிகளின் நுரையீரலில் இருந்த ஒமைக்ரான் பாதிப்பு பத்தில் ஒரு மடங்கு குறை வாக இருந்தது என ஆய் வில் கூறப்பட்டிருந்தது.
ஹாங்காங் பல்கலைக் கழகத்தின் மனித திசுக்கள் மீதான ஆய்வறிக்கையும் ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பதையே சுட்டிக் காட்டுகிறது.
12 நுரையீரல் மாதிரி களில் மேற்கொண்ட ஆய்வு கரோனாவின் முந் தைய உருமாற்றங்களைக் காட்டிலும் ஒமைக்ரா னின் பரவல் மெதுவாக இருப்பது தெரிய வந்துள் ளது.
ஒமைக்ரான் நுரையீர லின் கீழ்ப்பகுதியில் அதிக மாக பாதிக்காததால் அதிக உயிரிழப்புகளை ஏற்படாது என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள் ளனர். எலிகளின் மீதான ஆய்வில் ஒமைக்ரானின் பாதிப்பு அறிகுறிகள் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதன்மூலம் ஒமைக் ரான் தொற்றால் நுரை யீரல் பாதிப்பு ஏற்படாது என்ற தகவல் உலக மக் களை சற்று ஆறுதலில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment