கவிஞர் கலி. பூங்குன்றன்
கழகத் தோழர்களுக்கு
கழகத் தலைவர் வேண்டுகோள்!
தோழர்களே! அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த நிகழ்ச்சியைக்கூட அனைவரையும் அழைத்து, பொது வெளியில் நடத்தலாம். ஆனால் கரோனா தொற்று பற்றிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் அதனைத் தவிர்த்து காணொலியின் மூலம் இதனை நடத்துகிறோம்.
கழகத் தோழர்களுக்கு எனது வேண்டுகோள் கட்டுப்பாட்டுடன் கரோனாவை எதிர் கொள்ளுங்கள், முகக் கவசம் கட்டாயம், கைகளை எவ்வளவு அதிகமான முறையில் சோப்புப் போட்டுக் கழுவ முடியுமோ அத்தனை முறையும் கழுவுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். உடல் நலனைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாகவும் இருங்கள்.
இது யாருக்காகவோ அல்ல, அரசுக்காகவும் அல்ல - நமக்காக என்பதை மறந்து விடாதீர்கள்.
&- காணொலியில் கழகத் தலைவர் வேண்டுகோள்
"பா.ஜ.கவின் ஏழு ஆண்டுகள் ஆட்சியும் அதன் தேர்தல் ரகசியமும்" என்ற தலைப்பில் நேற்று (3.1.2022) மாலை 6.30 மணிக்கு காணொலி மூலம் கருத்துரை இடம் பெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தொடக்கவுரை ஆற்றினார்.
நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தபோதே அவர் நடத்திய ஆட்சி எத்தகையது என்பதைத் தெரிந்து கொண்டாலே, அவர் பிரதமர் என்ற நிலையில், எப்படி எல்லாம் பாசிசமாகக் கொடி பறக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 9 விழுக்காடு. ஆனால் பா.ஜ.க.வின் வேட்பாளர் பட்டியலில் என்றைக்குமே ஒரு முஸ்லிம்கூட இருந்தது கிடையாது.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் பெரும்பாலும் முஸ்லிம்கள்தான். ஆனால், உ.பி. சட்டத்தில் கைது செய்யப்பட்ட 127 பேர்களுமே முஸ்லிம்கள்தான். குஜராத்தில் மோடியின் அரசு எத்தகையது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குஜராத்தில் நரேடியாபாடியா என்னும் இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை, நினைத்தாலே மாரடைப்புதான் ஏற்படும்.
97 பேர் படுகொலை. அதில் குழந்தைகள் மட்டும் 35 பேர். இதனை முன்னின்று நடத்தியவர் ஒரு டாக்டர்; அவர் பெயர் மாயாபென் கோட்னானி; அவர் மோடி அமைச்சரவையில் ஓர் அமைச்சர். அவருக்கு ஒதுக் கப்பட்ட துறையோ மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை. இவர் முன்னின்றுதான் 35 பச்சிளங் குழந்தை களையும் கொன்று குவித்தார்.
நீதிமன்றத்தில் இவருக்கு 28 ஆண்டுகள் தண்டனை. அந்தத் தண்டனையை அவர் அனுபவித்தாரா? மோடிக் குத்தான் வெளிச்சம்.
குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகள் 2000 விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் அவ் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது எதனைக் காட்டுகிறது? குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று அடைமொழி கொடுத்ததும் உச்சநீதிமன்றமே! இவர் தான் இப்பொழுது 130 கோடி இந்திய மக்களின் பிரதமர்" என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர்.
தமிழர் தலைவர்
தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கருத்துரை வழங்கினார். அடுத்து ஜனவரி 5, 6 நாட்களில் நடைபெற விருக்கும் காணொலிக்கான முன்னுரையாக அவர் உரை அமைந்திருந்தது.
(1) ஏழாண்டு கால மோடியின் ஆட்சி - ஏழு மாத கால தி.மு.க. ஆட்சி - இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஏழு மாத ஆட்சி என்பது திராவிட இயக்கக் கொள் கையை அடிப்படையாகக் கொண்டது. ஏழு வருட பி.ஜே.பி.யின் மோடி ஆட்சி என்பது பார்ப்பனீய வருண தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. பா.ஜ.க.வின் கொள்கை என்பது ஆர்.எஸ்.எஸ். கொள்கையே.
ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கர் தனது ஞான கங்கை என்னும் நூலில் (Bunch of Thoughts) வருணத் தர்மத்தை, ஜாதித் தர்மத்தை விழுந்து விழுந்து நிலை நிறுத்தி எழுதியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். என்று எடுத்துக் கொண்டால் முழுக்க முழுக்க பார்ப்பன ஆதிக்க நிலைகொண்ட அமைப்பே.
ஆர்.எஸ். எஸ். ஒரு பார்ப்பன - பனியா அமைப்பு. அதன் அரசியல் வடிவமான பாரதீய ஜனதா என்ற அமைப்பில் இப்போது அதன் இந்த முகத்தை மறைத்தும், மாற்றியும் காட்டவே பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட நபர்களை முகமூடிகளாக்கி, மிகப்பெரும்பாலோரான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையினர் சிலரை கொஞ்சம் கொஞ்சம் பெயருக்கு விளம்பரத்திற்கு வைத்து "வித்தைகளைச்" செய்து, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்ற, திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்!
அதன் கொள்கையை வகுக்கும் மிக முக்கியமான அமைப்பு, அகில பாரத பிரதிநிதித்துவ சபா -
அதன் தலைமை அமைப்பு பற்றி மெக்வன்ஷி எழுதுகிறார். (பக்கம் 46).
"அகில இந்திய செயற்குழுவை ஒருவர் ஆராய்ச்சி செய்வாரானால், 2000-த்திற்குப் பிறகும்கூட, பெரும் பாலான பதவிகளை வகித்தவர்கள் பிராமணர்களே.
கொஞ்சம் பனியா அல்லது க்ஷத்திரியா மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒரு ஜோடி மக்கள் இருந்தார்கள். ஒரே ஒரு "தலித்தோ" அல்லது "ஆதி வாசியோ அங்கே இல்லை. இதற்கான காரணம், மிகவும் தெளிவானது. அந்த அமைப்பின் தேசிய நிலை அளவுக்கு உயர தலித்தோ அல்லது ஆதிவாசியோ முயலவில்லை. அப்படியானால் தலித்தோ அல்லது ஆதிவாசியோ எவ்வாறு ஹிந்து ராஷ்டிரத்தின் பகுதியாக இருக்க முடியும்? இது ஒரு சவால் விடுக்கும் கேள்வி!
"இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் எடுத்துக்காட்டு ஒன்றை வெளிப்படுத்துகிறது. அவர் ஒரு தீண்டப்படாத ஜாதியை சார்ந்தவர். பா.ஜ.க. வில் உயரத்திற்கு எழுந்தார். மேலும் இப்பொழுது நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சாசனப் பதவியை அடைந்துள்ளார். ஆனால், சட்டப்பூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ்.சின் மிக உயர்ந்த பதவிக்கு அவர் பெயர் ஒரு போதும் கருதப்படவில்லை."
பன்வர்மெக்வன்ஷி எடுத்துக்காட்டுவதைப் போலவே பொம்மைப் பதவிகளில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அமர்த் தினர் என்று காட்டவே பா.ஜ.க.வில் அரசியலுக்காக (வாக்கு வங்கிக்காக) இப்போது வரை ராம்நாத் கோவிந்த் என்பவரைக் காட்டுகிறார்கள்!
ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அப்படி உயரும் அளவில் இன்னும் 4 ஆண்டுகளில் நூறாண்டு நெருங்கும் நிலையில், இப்போது வரை ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட கொள்கை வகுக்கும் பொறுப்புக்குச் சென்றதில்லை.
ஜாதி வித்தியாசம் பார்க்காதவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதும், ஓர் ஒப்பனையே தவிர, உண்மையல்ல என்பதற்கு அதன் தேசியத் தலைமைப் பொறுப்பாளர்கள் - சர் சங்க் சாலக் எல்லாம் பார்ப் பனர்களே என்பதும், அதன் தலைமைப் பீடமான 'அகில பாரத பிரதிநிதித்துவ சபா'வின் அமைப்பும் துல்லியமாக விளக்குவதாகவே அமைந்துள்ளது!
ஆர். எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதீய பிரதிநிதித்துவ சபா என்ற தலைமைப் பீடத்தின் அமைப்பில் மொத்தம் உள்ள 36 (முப்பத்தாறு பேர்.
பார்ப்பனர்கள் - 26 பேர்
பனியாக்கள் - 5 பேர்
மற்ற ஜாதிக்காரர்கள் - 3 பேர்
பார்ப்பனரல்லாதார் - “சூத்திரர்கள்” - 2 பேர்.
(விரிவான தகவல்களுக்கு ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி அவர்கள் எழுதிய "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" என்னும் நூலைப் படியுங்கள்).
சுயமரியாதை இயக்கமும் 1925ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸும் அதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. (பொதுவுடைமை இயக்கமும் இதே ஆண்டில்தான் தொடங்கப்பட்டது).
வன்முறை வெறியாட்டம் காரணமாக மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.
திராவிடர் கழகம் அரசியல் காப்புடையதல்ல - தேர்தலில் நிற்காத இயக்கம். ஆர்.எஸ்.எசும் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறது.
ஆனால் பா.ஜ.க.வை இயங்குவது ஆர்.எஸ்.எஸ்.தான் ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவர்தான் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளராக வர முடியும் என்று ஆர்.எஸ்எஸின் விதி முறைகள் திருத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வுக் குழுவில் கண்டிப்பாக ஆர்.எஸ்.எசுக்கு முக்கிய பிரதிநிதித்துவம் என்பதும் முக்கியமானதாகும்.
2) வன்முறையில் நம்பிக்கை கொண்டது ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ். எந்த எந்தக் கலவரத்தில் ஈடுபட்டது. என்பது அரசு சார்பில் அமைக்கப்பட்ட பல ஆணை யங்களே பட்டியலிட்டுள்ளன.
காந்தியாரைச் சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். பயிற்சியாளரோ - இந்து மகா சபையாகவோ இருந்து தொலையட்டும் - இரண்டின் தத்துவங்களும் ஒன்றே! அந்த இந்து வெறித்தனம் தான் காந்தியாரின் உயிரைக் குடித்து ஏப்பமிட்டது.
இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது முக்கியமானது. காந்தியார் சுடப்பட்டார் - கொல்லப்பட்டார் என்ற தகவல் பரவிய மாத்திரத்திலே பம்பாயில் அக்கிரகாரங்கள் எரிக்கப்பட்டன; பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர் என மொரார்ஜி தேசாய் தன் சுய வரலாற்று நூலில் குறிப்பிட் டுள்ளார்.
ஆனால், பெரிய அளவில் பார்ப்பனர்களுக்கு எதி ராகத் தாக்குதல் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழ்நாடு அமைதித் தென்றல் உலவும் பூமியாக இருந்தது எப்படி?
முதல் அமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் கேட்டுக் கொண்டபடி தந்தை பெரியார் வானொலியில் நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்தான் பார்ப் பனர்களைக் காப்பாற்றியது.
காந்தியாரைச் சுட்டுக் கொன்றது ஒரு முசுலிம் என்று திட்டமிட்டுப் பிரச்சாரம் கிளப்பி விடப்பட்ட சூழலில் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் எல்லாம் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதுண்டு. கடைகள் சூறை யாடப்பட்டன.
அந்த சூழலில் தான் 'காந்தியாரைச் சுட்டுக் கொன்றது முசுலிம் அல்ல - நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனன் தான்.ஆனாலும் எந்தப் பார்ப்பனர்மீதும் தாக்குதல் கூடாது. அவர்களின் வீடுகளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடாது.
கோட்சே என்பவன் ஒரு துப்பாக்கி - அதனை இயக் கியது மதவெறி! அதை நோக்கித் தான் நமது தாக்குதல் இருக்க வேண்டும் - இந்த அடிப்படையில் இந்த நாட்டுக் குக் காந்திநாடு என்றும், இந்த மதத்திற்குக் காந்தி மதம் என்றும் பெயர் சூட்ட வேண்டும் என்றார் தந்தை பெரியார்.
அந்த நேரத்தில் தந்தை பெரியார் மட்டும் கொஞ்சம் கண் ஜாடை காட்டியிருந்தால் எத்தனை எத்தனை அக்ரகாரங்கள் எரித்திருக்கும் - எத்தனை எத்தனைப் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டு இருப்பார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பார்ப்பனர்கள் தந்தை பெரியாருக்கு நன்றிக் கடன்பட்டவர்கள்; தாய் மதத்துக்குத் திருப்புங்கள் என்கிறார்கள். திரும்பினால் அவர்கள் நல்லவர்கள். சகோதரர்கள் ஆகி விடுகிறார்களே - அந்தச் சகோதரர்களை இன்னொரு மதத்தில் இருப்பதாலேயே கொன்றுவிட வேண்டுமா?
3) அடுத்து அய்ந்து மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கின்றன. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. அதன் பிறகு மக்களவைத் தேர்தலும் வரும்.
இவற்றில் வெற்றி பெறுவதற்காக அனேக தந்திரங்களை கையாள்வார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகை தந்திரமும், திரை மறைவுத் திட்டமும் இருக்கும். சாம, பேத, தான, தண்டங்களைக் கையாளுவார்கள். தர்மத்தைக் காப்பாற்ற அதர்மமும் செய்யலாம் என்பது அவர்கள் வேதம்.
காந்தியாரைக் கொன்ற நாசுராம் கோட்சேயே நீதி மன்றத்தில் கீதையின் சுலோகங்களை எடுத்துக்காட்ட வில்லையா?
அரசியலில் இருந்ததாகக் கருதப்பட்ட ராஜாஜியே என்ன சொன்னார்? "தருமம் கெட்டுப் போனால், அதர்மத் தினாலாவது அதைத் தடுக்க முயலுவது ஒரு தருமமாகும்" (சுதேசமித்திர 16.2.1964) என்றாரே.
இராமாயணத்திலே சம்பூகவதத்தின் தத்துவம் என்ன? சூத்திரன் தவம் செய்வது வருண தருமத்திற்கு விரோதம் என்பதுதானே! அதே நேரத்தில் தமிழனாகிய கம்பன் எழுதிய இராமாயணத்தில் சம்பூகவதம் இடம் பெறும் உத்தரகாண்டத்தை எழுதாமல் தவிர்த்தானே!
இராமனை ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்கள், பா.ஜ.க. வினர் தூக்கிப் பிடிப்பது எதற்காக? இராம ராஜ்ஜி யத்தை உருவாக்குவோம் என்று முழக்கமிடுவது எந்த அடிப்படையில்?
சரியாக மக்களவைத் தேர்தல் நடக்கும் 2024ஆம் ஆண்டில் அயோத்தியில் இராமன் கோயிலைத் திறப் பார்கள்.
மக்கள் நலன் முக்கியமல்ல - வளர்ச்சிப் பணி முக்கிய மல்ல - பொருளாதாரம், வேலை வாய்ப்பு என்பதெல்லாம் தேவையில்லை. மத உணர்வைக் கையில் எடுத்துக் கொண்டபின் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்ற யுக்திதான் தந்திரம்தான் அவர்களுடையது.
தமிழ்நாட்டில் அது எடுபடுவதில்லை. காரணம் இது தந்தை பெரியார் பூமி. திராவிடத் தத்துவம் வேர்ப் பிடித்த மண் தமிழ்நாட்டில் (1971 தேர்தலில் இராமன் பிரச் சினையைக் கையில் எடுத்து பெருந்தோல்வி அடைந் தார்களே. அதனை நினைவுப்படுத்திக் கொள்ளலாம்).
மாட்டு மாமிசம், லவ் ஜிகாத் என்று இந்து மதவெறியைக் கிளப்பி விடுவார்கள்.
சாதனைகளைச் சொல்லி மக்களின் வாக்குகளைப் பெற முடியாத நிலையில் பக்தியையும், மதவெறியையும் கிளப்பி விட்டு வெற்றி பெறலாம் என்பதே அவர்களின் திட்டமும் சூழ்ச்சியுமாகும்.
4) பார்க்கப் போனால் அவர்கள் சனாதனவாதிகள் - அவர்கள் கையில் இராமன் வைத்திருந்த வில்லும் அம்பும் தானே இருக்க வேண்டும்? ஏன் ரபேல் விமானத்தைத் தானே தேடுகிறார்கள்?
சனாதனக் கட்சி - ஆனால் பயன்படுத்துவது எல்லாம் அசல் 'சைன்ஸ்'தான். அதற்கென்றே குழுக்களை அமைத்து சமூக வலை தளங்கள் மூலம் பொய்யையும் புரட்டையும் அவிழ்த்துக் கொட்டுவார்கள்.
அப்படியே தேர்தலில் தோற்றாலும் எதிர்க்கட்சி உறுப் பினர்களை விலைக்கு வாங்குவார்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி வளைப்பார்கள்.
(மேகாலயாவில் மொத்தம் சட்டமன்ற உறுப்பினர்கள் 60 அதில் பா.ஜ.க. 2 பேர்தான். இப்பொழுது ஆளும் கட்சி யானது எப்படி? தேசிய மக்கள் கட்சி, காங்கிரசில் வெற்றி பெற்றவர்களைத் தன் பக்கம் இழுத்தது எப்படி? எந்த அதர்மத்தைச் செய்தாவது தங்கள் காரியம் நடை பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் தர்மமும், அரசியலும்)
(குறிப்பு: தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் சாராம்சம் தான் இவை).
No comments:
Post a Comment