பெரியார் பாலிடெக்னிக் மாணவி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 4, 2022

பெரியார் பாலிடெக்னிக் மாணவி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம்

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் வென்றார். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் கடைப்பிடிக்கப்பட்ட  ஆற்றல் சேமிப்பு வாரத்தின் ஒரு நிகழ்வாக மின்சார உற்பத்தி, பயன்பாடு, சேமிப்பு மற்றும் பாதுகாப்பு  என்ற தலைப்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற  ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு கட்டட எழிற்கலையியல் மாணவி எஸ். அபிராமி  முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக் கப்பட்டார்.   20.12.2021 அன்று தஞ்சாவூர், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல்பரிசை  மாணவி பெற்றுக் கொண்டார். பரிசு வென்ற மாணவி எஸ். அபிராமியை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் இரா. மல்லிகா பாராட்டினார். 

No comments:

Post a Comment