புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக உறுப்பினரும், விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழ்களின் தொடர் சந்தாதாரரும், புதுச்சேரி ரோட்டரி கிளப் உறுப்பினருமான பெரியாரிய சிந்தனையாளர், இந்தியன் வங்கியின் மேனாள் மேலாளர் சி.என்.பிள்ளை உடல் நலக் குறைவால் 28.12.2021 அன்று இயற்கை எய்தினார். மறைவு செய்தியறிந்து புதுச்சேரி மாநில கழக தலைவர் சிவ.வீரமணி, மண்டல கழக செயலாளர் கி.அறிவழகன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம், அமைப்பாளர் மு.குப்புசாமி, முகமது நிஜாம், கழக இளைஞரணி தலைவர் தி.இராசா ஆகியோர் சென்று மாலை வைத்து இறுதி மரியாதை செய்தனர். சி.என்.பிள்ளையின் துணைவியார் பத்மா, பிள்ளையின் மகன், மகள், மற்றும் பா.குமரன், ஆ.சிவராசன் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இறுதி நிகழ்வு 29.12.2021 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. பல்வேறு சமூக நல சங்கங்கள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment