4 கி.மீ. தூரம் தாயின் உடலை சுமந்து சென்று இறுதி நிகழ்வுகளைச் செய்த மகள்கள்..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 4, 2022

4 கி.மீ. தூரம் தாயின் உடலை சுமந்து சென்று இறுதி நிகழ்வுகளைச் செய்த மகள்கள்..!

ஒடிசா, ஜன. 4- தாயின் இறுதி நிகழ்வுகளை மகன்கள் புறக்கணித்த நிலையில் 4 கி.மீ. தூரம் தாயின் உடலை சுமந்து சென்று 4 மகள்கள் இறுதி நிகழ்வுகளைச் செய்து உள்ளனர்.

ஒடிசாவில் தாயின் இறுதி நிகழ்வுகளில் இரு மகன்கள் கலந்து கொள்ளாததை அடுத்து, நான்கு மகள்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுடுகாட்டிற்குத் தாயின் உடலை தோளில் சுமந்து சென்று இறுதி நிகழ்வுகள் செய்தனர்.

ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் ஜதி நாயக் என்ற மூதாட்டி 2.1.2022 அன்று காலமானார். இவருக்கு 2 மகன்களும் 4 மகள்களும் உள்ள னர். இவரது மகள்களுக்கு திரு மணமாகிவிட்ட நிலையில், அவ ரது மகன்களும் அவர்களது குடும் பத்தினரும் தனித்தனியாக வசிக் கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மூதாட் டியை அவரின் மகன்கள் புறக் கணித்து வந்துள்ளனர். கணவர் இறந்த பிறகு மூதாட்டி, சிறு வியாபாரம் செய்து தன்னுடைய உணவுக்கான செலவுகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மூதாட்டி இறந் ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரது இரண்டு மகன்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் இறுதி நிகழ்வு களை செய்ய வரவில்லை. இந்த நிலையில் கலாச்சார தடைகளை உடைத்து மூதாட்டியின் மகள்கள் 4 பேரும் தங்கள் தாயை எரியூட்டும் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து இறுதி நிகழ்வு களைச் செய்வதற்காக சுடுகாடு வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் தங்கள் தாயின் உடலை சுமந்து சென்று 4 மகள்களும் தங்கள் தாயின் இறுதி நிகழ்வுகளை செய்து முடித்துள்ளனர்.

No comments:

Post a Comment