கரூர் மாவட்டம் கிருட்டிணராயபுர ஒன்றியம் லாலாபேட்டை பாலப்பட்டியில் தந்தை பெரியார் தத்துவக் கல்வெட்டிற்கு அருகில் குளித்தலைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் திராவிடர் கழக கொடியினை ஏற்றி வைத்தார். உடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர் இரா.உமாபதி மற்றும் திராவிடர் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், ஒன்றிய செயலாளர் இரா.உமாபதி ஆகியோருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. கரூர் மாவட்ட தலைவர் ப.குமாரசாமி மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் உ.வைரன், கிருட்டிணன் ராயபுரம் ஒன்றிய தலைவர் இரா.பெருமாள், குளித்தலை ஒன்றிய தலைவர் செல்லதுரை உள்ளனர். நிகழ்ச்சியை முசிறி இரத்தினம் ஏற்பாடு செய்திருந்தார். அனைவருக்கும் பகல் உணவு அளித்து மகிழ்ந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment