தமிழ்நாட்டில் புதிதாக 4,862-பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 4,862-பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, ஜன.6 சென்னையில் மேலும் 2,481- பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-

தமிழ்நாட்டில் மேலும் 4,862- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்  2,481-பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,577-ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து மேலும் 668- பேர் குணம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment