உரத்தநாட்டில் நடைபெற்ற தமிழர் தலைவரின் 89ஆவது பிறந்த நாள் விழா சிலம்பப் போட்டியில் 250 வீரர்கள் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 4, 2022

உரத்தநாட்டில் நடைபெற்ற தமிழர் தலைவரின் 89ஆவது பிறந்த நாள் விழா சிலம்பப் போட்டியில் 250 வீரர்கள் பங்கேற்பு

உரத்தநாடு, ஜன. 4- உரத்தநாடு லிட்டில் ரோஸ் மேல்நிலைப்பள்ளியில் மாநல் அறக்கட்டளை, தண்டர் விளையாட் டுக் கழகம், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் இணைந்து  ஒன்றிய அளவிலான சிலம்பப் போட்டியை நடத்தினர்.

நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் மாநில கலைத்துறை செயலாளர்

.சித்தார்த்தன் வரவேற்றார். லிட்டில் ரோஸ் பள்ளியின் தாளாளர் வீ.அகிலன் நிகழ்விற்கு தலைமை ஏற்றார். பெரியார் வீரவிளையாட்டுக் கழக உறுப்பினர் கறம்பகுடி முத்து, நகர கழக தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக ஒன்றிய செயலாளர் .மணிவண்ணன் வாழ்த் துரை வழங்கினார். போட்டியின் விளையாட்டு சுடரினை மாநில திரா விடர் கழக அமைப்பாளர் இரா.குண சேகரன் ஏற்றி வைத்தார்.

பெண்கள் போட்டியினை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினர் .பர்வின் தொடங்கி வைத் தார். ஆண்கள் போட்டியினை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சேகர் தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட இளை ஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், ஷாஜி ஹூ மார்ட் உரிமையாளர் பத்து முகமது, ஒன்றிய கழக துணைச் செயலா ளர் இரா.சுப்ரமணியன், மண்டலக் கோட்டை மு...தலைவர் ரவிச்சந்தி ரன், மதிமுக பொறுப்பாளர் ராதா மணாளன், பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர் ஒன்றிய கழக துணைச் செயலா ளர் நா.பிரபு, நகர கழக செயலாளர் ரெ.ரஞ்சித்குமார், ஒன்றிய விவசாய அணித்தலைவர் மா.மதியழகன், ஒன் றிய இளைஞரணி செயலாளர் நா.அன் பரசு, தெற்குப் பகுதி செயலாளர் .சுடர் வேந்தன், எலந்தவெட்டி கந்தசாம், தஞ்சை இளவரசி, கைகாட்டி ராஜா ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப் பித்தனர். தஞ்சை மாநகர கழக அமைப் பாளர் தமிழ்செல்வம் நன்றி கூறினார்.

பரிசளிப்பு

மாலையில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்கள் இறுதிப் போட்டியினை அரசு வழக்குரைஞர் சோலை.இளையபாரதி, பாப்பாநாடு சட்டமன்ற உறுப்பினர், கல்வி அறக்கட்டளை தலைவர் மு.செல்வராசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பெண்கள் போட்டியினை நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில் குமார், நகர கழக இளைஞரணி செயலா ளர் பேபி ரெ.ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பரிசளிப்பு விழாவில் அனைவரையும் மாநல் அறக்கட்டளை நிறுவனர் மாநல். பரமசிவம் வரவேற்றார். பெரியார் வீர விளையாடடுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், தண்டர் விளை யாட்டுக் கழக நிறுவனரும், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாவட்ட தலைவருமான தே.பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநி லத் தலைவர் .சுப்ரமணியம் நிகழ்விற்கு தலைமையேற்று போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். போட்டிக்கு நடுவர்களாக பணியாற்றிய அனைவருக்கும் திரா விடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் சிறப்பு செய்தார்.

நிகழ்வில் மாநில .. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், ஒன்றிய கழக துணைத் தலைவர் இரா.துரைராசு, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் நெல் லுப்பட்டு .இராமலிங்கம், ஒன்றிய .. தலைவர் நெடுவை கு.நேரு, தஞ்சை பொறியாளர் சரவணன், திருநல்லூர் பாலு, கிழக்கு பகுதி கழக செயலாளர் துரை.தன்மானம், மேற்கு பகுதி செயலாளர் இரா.மோகன்தாஸ், கழகத் தோழர்கள் நெடுவை ஜெயசீலன், மண் டலக்கோட்டை சுரேந்தர், ஒக்கநாடு மேலையூர் பெரியார் மணி, சாமிநாதன், கண்ணந்தகுடி மேலையூர் ..தலை வர் செந்தில், உரத்தநாடு அதிமுக முரு கேசன் உள்ளிட்ட ஏராளமான பொது மக்களும், பெற்றோர்களும், மாணவர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பெரியார் வீரவிளையாட்டுக்கழக ஒன் றிய தலைவர் இரா.மகேஸ்வரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment