அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார்கள்
சென்னை, ஜன.4- கோவிட் 19 கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சையைத் தீவிரப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டிலேயே முதல் சித்தா சிகிச்சை மய்யமாக தமிழ்நாடு அரசின் கரோனா சிறப்பு சித்தா மருத்துவ சிகிச்சை மய்யம் சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் இன்று (4.1.2022) காலை தொடங்கப்பட்டுள்ளது. இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
முன்னதாக அமைச்சர் பெருமக்கள், மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவக்குழுவினரை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களுக்கு இயக்க வெளியீடுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் சு.கணேஷ் முன்னிலையில் திறப்புவிழா நடைபெற்றது.
திறப்பு விழாவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங், மருத்துவத்துறை இணை இயக்குநர் சித்த மருத்துவர் பார்த்திபன், மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் சித்த மருத்துவர் எம்.பிச்சைக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் சித்த மருத்துவர் சசிக்குமார், சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மய்ய ஒருங்கிணைப்பாளர் சித்த மருத்துவர் எம்.கே.மாலதி மற்றும் மருத்துவக்குழுவினர் அனிஷா, சத்தீஷ்குமார், தியாகராஜன், கலைச்செல்வி,சத்யப்பிரியா, திருஞானம், விவேகானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணைய உறுப் பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
கரோனாவினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்திடும் வகையில், கரோனா சிறப்பு சித்த மருத் துவ சிகிச்சை மய்யம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் சித்த மருத்துவத்துக்கான கரோனா சிகிச்சை மய்யத்தில் ஆக்சிஜன் பொருத்திய படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மணியம்மை மருத் துவமனை சார்பில் விழாவுக்கு வருகை புரிந்தோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment