இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அய்ஏஎஸ் பணி விதிகளை திருத்தும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். அது கூட்டாட்சி தத்து வத்துக்கு எதிரானது என தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் பிரதமருக்கு கடிதம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
உ.பி. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் உள்ள 159 சட்டமன்ற இடங்களுக்கு சமாஜ்வாடி கட்சி யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், இஸ்லாமியர் 19.5% தாழ்த்தப்பட்டோர் 18.23%, யாதவர் 9.43% என இடங்களை ஒதுக்கியுள்ளது.
தி டெலிகிராப்:
ராணுவ சட்டத்தை எதிர்த்து குடியரசு நாள் விழாவை புறக்கணிக்க நாகா மாணவர் அமைப்பு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
இந்த ஆண்டு 9494 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் முடிவு..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment