எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந் தால் "உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும்' 'என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும், சென்ற வழியிலும் சாணத் தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்" என்று கூறினாராம். உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல் லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 1819-இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று. இவ் வாறு “செந்தமிழ்ச் செல்வி" கூறுகிறது.
திருக்குறள்பற்றி பார்ப்பனர்களின் மதிப்பும் - தொண்டும் எத்தகையது என்பதற்கு ''செந்தமிழ்ச் செல்வி" இதழில் (மார்ச் 2000) வெளிவந்த 'குறளும் அயோத்திதாசரும்'' என்ற தலையங்கமே தக்க சான்று கூறும். அது வருமாறு: 1796இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரை அவர்கள் தமிழ் படிக்க விரும்பினார். அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப் பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனா ரான கந்தசாமி என்பவர். "எல்லீஸ் தனக் குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர் களிடம், கந்தசாமி திருக்குறள் கொடுத்தா ரென்றார். அதற்கு அவர்கள். அவர் தீண் டத்தகாதவர். அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர்! காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம். 'ஏன் இப்படி பிராம ணர்கள் கருதுகிறார்கள்' என்று கந்தசா மியை அழைத்து எல்லீஸ் துரை கேட்க. “எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.
No comments:
Post a Comment