தருமபுரி மாவட்டம் ஆலமரத் துப்பட்டியை சேர்ந்த பெரியார் அம் பேத்கர் வாழ்வியல் சிந்தனையாள ரும், தர்மபுரி நகர கழக பொறுப்பாளர் - ப.சி. காமராஜருடைய சித்தப்பாவுமான துரைராஜ் அவர்கள் 2.1.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி அளவில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட கழகத் தலைவர் மு.பரமசிவம், மாநில திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், மாவட்ட செயலாளர் த. யாழ்திலீபன், மாநில மகளிர் அணி செயலா ளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மண்டல கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சின்னராஜ், மாவட்ட துணைத் தலைவர் இரா. வேட்ராயன், பொதுக்குழு உறுப்பினர் இ.மாதன், ஆசிரியர் சுந்தரம், மண்டல மாணவர் கழக செயலாளர் செல்லதுரை, மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் பூபதிராஜா, மற்றும் அனைத்து கட்சி சார்பில் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர். மறைவுற்ற துரைராஜ் அவர்கள் கழகம் நடத்திய மனுதர்ம எரிப்புப் போராட்டம் மற்றும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment