கரோனா பாதிப்பு ஏற்பட்டோர் செய்ய வேண்டியது என்ன? சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

கரோனா பாதிப்பு ஏற்பட்டோர் செய்ய வேண்டியது என்ன? சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியீடு

சென்னை, ஜன.6  கரோனா, ஒமைக் ரான் பாதிப்பு ஏற்பட்டவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று சுகாதார துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கரோனா, ஒமைக்ரான் பாதிப் பை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக அதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் யாரெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவிப்பு வெளி யிட்டு உள்ளது.

சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில், மிதமான அறிகுறி, பாதிப்பு உள்ளவர்கள் தங் களை வீடுகளிலேயே தனிமைப் படுத்தி கொள்ளலாம்.

மருத்துவரின் பரிந்துரைப்படி, ‘பாராசிட்டமால்’, ‘போலிக்ஆசிட் மாத்திரை, பத்து நாட்களுக்கு உட் கொள்ள வேண்டும். படுக்கையில், குப்புறப்படுத்து கொள்வதும், அதிக தண்ணீர் அருந்துவதும் அவசியம். ரத்த ஆக்சிஜன் அளவைபல்ஸ் ஆக்சி  மீட்டர்கொண்டு, ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை கட் டாயம் பரிசோதிக்க வேண்டும். ரத்த ஆக்சிஜன் அளவு, 92 ஆக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

கரோனா தடுப்பூசி செலுத்தாத, இணை நோயாளிகளுக்கு கரோனா பாதிப்பு தெரிய வந்தால், உடன டியாக கண்காணிப்பு மய்யத்தில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது அவசியம்.  தடுப்பூசி செலுத்தி விட்டு, இணைநோய் எதுவுமில்லாதவர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்தி கொள்ளலாம்.

வீடுகளில் தனிமைப்படுத்துவோர் மருத்துவர் அறிவுரையை பின்பற்றி, தக்க மருந்து, மாத்திரை உட் கொண்டு, ஓய்வில் இருப்பது மிகவும் அவசியம்.  அறிகுறி வந்து, பாதிப்பு உறுதி செய் யப்பட்டால், ஆக்சிஜன் தேவைப்படு வோர், இணைநோய் உள்ளவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பி ணிகள், 60 வயதுக்கும் மேற்பட்டோர், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரி ழந்தோரின் குடும்பங்களை சார்ந் தவர்கள் கட் டாயம் மருத்துவமனை யில் சேர்ந்து கொள்ள வேண்டும் என தெரி விக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment