சென்னை, ஜன.6 இதுவரை ரூ.50 ஆயிரம் நிவாரண உதவித் தொகை பெறாத கரோனாவால் இறந்தவர் களின் வாரிசுகள், முழுமையான ஆவணங்களு டன் விண்ணப் பிக்கலாம் என சென்னை ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிவாரணத்தொகை
கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு, உயிர் இழந்த குடும்பத் தினர் வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்க தமிழ் நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. அதன்படி, உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மாநகராட்சியிடம் உள்ள பதிவுகளின்படி 8 ஆயிரத்து 348 பேர் கரோனா வால் பாதிக்கப்பட்டு இறந்துள் ளனர். இதுவரை 6 ஆயிரத்து 888 பேர் இணைய வழியில் பதிவு செய்துள் ளனர். அதில், அனைத்து ஆவணங் களும் சரியாக பதிவேற்றம் செய்யப் பட்ட 3 ஆயிரத்து 638 பேர் களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை மின்னணு பரிவர்த் தனை மூலம் வழங்கப் பட்டுள் ளது. அதன் விவரம் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.
மீதமுள்ள விண்ணப்பங்கள் வாரிசு மற்றும் சட்ட ரீதியான பிரச் சினைகள் காரணமாகவும், முழுமை யான முகவரி இல்லாத தாலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த வர்கள் என்பதனாலும், கள ஆய்வின் போது வேறு முக வரிக்கு குடி பெயர்ந்து சென்ற தாலும், மக்க ளாகவே முன்வந்து இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இனங்களில் முழு மையாக மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்காததாலும் அரசு வழங்கும் நிதி உதவியினை வழங்க இயலாத நிலை உள்ளது.
எனவே, கரோனாவால் உயிர் இழந்தவர்களின் வாரிசு தாரர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 7ஆவது மாடியில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவிலோ அல்லது 1077 என்ற இலவச எண்ணையோ அல்லது சம்பந்தப் பட்ட வருவாய் வட் டாட்சியர்களை தொடர்பு கொண்டோ கரோனா பரி சோதனை செய்யப்பட்டதற் கான ஆவணம், மருத்துவ சிகிச் சைக் கான ஆவணங்கள், மயான சான் றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வங்கி கணக்கு விவரம் போன்ற முழுமையான ஆவணங் களுடன் தாக்கல் செய்து ரூ.50 ஆயிரம் நிதி உதவியினை பெறலாம்.
மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரை இழந் தோர் அல்லது இருவரையும் இழந்தோர் முறையே ரூ.3 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் பெற்றவர்களும் மேற்படி ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை பெற தகுதி உடையவர்கள் என்பதால் அவர்களோ அல்லது அவர் களின் பாதுகாவலர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங் களுக்கு சென் னை வடக்கு வருவாய் கோட் டாட்சியர் (9385250785), மத்திய வரு வாய் கோட் டாட்சியர் (9445461834), தெற்கு வருவாய் கோட்டாட்சியர் (9150042806) மற்றும் வருவாய் வட்டாட்சியர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment