ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

விழுப்புரம், ஜன. 30- ஆதிச்ச நல்லூர் அகழாய்வுப் பணி யில் 45-க்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

ஆதிச்சநல்லூரில் ஒன் றிய தொல்லியல் துறை சார்பில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்.10 ஆம் தேதி தொடங்கி, ஒன்றிய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய் வுப் பணிகள் நடந்து வரு கின்றன.

இதற்காக, ஆதிச்ச நல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் 28-க்கும் மேற்பட்ட குழிகள் தோண் டப்பட்டன. இப்பணியில்தற்போது வரை 45 முதுமக்கள்தாழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள் ளன. சங்க காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்த வாழ்விடப்பகுதிகள் கண் டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற் போது 3,500 ஆண்டுக ளுக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, இங்கு சுண்ணாம்பு தளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மிகவும் வலிமையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநரும், திருச்சி மண்டல இயக் குநருமான அருண்ராஜ் கூறும்போது, ஆதிச்சநல் லூரில் தோண்டப்பட்ட குழிகளை இறுதி செய்து, எந்த குழியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சிய கம் அமைக்கலாம் என முடிவு செய்து, அதன் மீது கண்ணாடித் தளம் அமைக்கப்படும். மேலும், பிரம்மாண்டமாக செட் அமைத்து, இந்த குழி களை பாதுகாப்பதற்காக ஒப்பந்தம் விடும் பணிகள் தொடங்கி உள்ளன. ஒவ் வொரு ஆய்வாளர்களை யும் அழைத்து, அவர்கள் துறை மூலமாக ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப் பட்ட பொருட்களை காட் சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரை வில்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment