தமிழ்நாட்டில் முதன் முறையாக மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு இணையத்தில் தொடங்குகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

தமிழ்நாட்டில் முதன் முறையாக மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு இணையத்தில் தொடங்குகிறது

சென்னை, ஜன. 30-  தமிழ் நாட்டில் முதன் முறை யாக மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணையத் தில் நடைபெறுகிறது. இதையடுத்து பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய் யலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரி கள் தகவல் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் மருத் துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 27ஆம் தேதி சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை யில் நடைபெற்றது. முதல் நாள் சிறப்பு பிரிவினருக் கான கலந்தாய்வில் 73 பேர் கல்லூரிகளில் சேரு வதற்கானஅனுமதி ஆணையை பெற்றனர். அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி நடந்த இரண் டாவது நாளில் அரசுப் பள்ளி மாணவர்களுக் கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கான கலந் தாய்வில் 541 பேருக்கு அனுமதி ஆணை வழங் கப் பட்டது.

பொதுப் பிரிவினருக் கான கலந்தாய்வில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்ப தால் கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை இணையத் தில் நடத்த முடிவு செய் யப்பட்டது.

அதன்படி பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு  ஆகிய சுகா தாரத்துறை இணைய தளங்கள் மூலம் இன்று (30.1.2022) நடைபெறு கிறது. அரசு மற்றும் தனி யார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக் கான தரவரிசைப் பட்டி யலில் 24,949 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய் வில் பங்கேற்க தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 1 முதல் 10,456 பேருக்கு, நீட் மதிப்பெண் 710 முதல் 410 வரை அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இன்று காலை 10 மணி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையத்தில் கல்லூரி களில் இடங்களை தேர்வு செய்யலாம்.

அதைத்தொடர்ந்து வரும் 6ஆம் தேதி சான்றி தழ்சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். 12ஆம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணைய தளங்களில் வெளியிடப் படும். 13ஆம் தேதி கல் லூரிகளில் சேருவதற் கான ஆணையை இணை யதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள் ளலாம். மேலும் 14ஆம் தேதி முதல் 17ம் தேதி பிற்பகல் 3 மணிக்குக் கல் லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும். இது தொடர் பான மேலும் விவரங்க ளுக்கு இணையதளங் களை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். தமிழ்நாட் டில் முதல் முறையாக மருத்துவம், பல் மருத்து வப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழி நடைபெறுகிறது. இதை யடுத்து தனியார் கல்லூரி களின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந் தாய்வு நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் வசந்தாமணி கூறுகையில், மருத்துவம், பல்மருத்துவம் படிப்பு களுக்கான அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வின் முடிவுகள் 30.1.2022 காலைக்குள் வெளியாகும். அந்த முடிவு கள் வெளியானதும் நாங்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வை திட்டமிட் டபடி இணையத்தில் தொடங்கி விடுவோம். அப்படி அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால், இங்கும் கலந்தாய்வு தொடங்கு வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

No comments:

Post a Comment