தமிழ்நாடு குடிமைப் பணி அலுவலர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

தமிழ்நாடு குடிமைப் பணி அலுவலர்

விருப்ப ஓய்வு பெற்ற இரண்டே மணி நேரத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த பா...

 லூதியானா, ஜன 30   தமிழ்நாடு குடிமைப்பணி அலுவலர் ஜக்மோ கன் சிங் விருப்ப ஓய்வு பெற்ற இரண்டு மணி நேரத்திற்குள் தேர் தலில் போட்டியிட பா... வாய்ப் பளித்துள்ளது பஞ்சாப் மாநில பா...வில் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தி உள்ளது

தமிழ்நாடு குடிமைப்பணி அலுவலர் ஜக்மோகன் சிங் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பா... சார்பில் போட்டியிடு கிறார். இவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலினை போல மக்கள் பணியாற்ற விரும்புவதாக கூறி  விருப்ப ஓய்வு பெற்றார்.

அய்,.எஸ் அதிகாரி ஜக் மோகன் சிங் ராஜூ  தமிழ்நாடு  புதுடில்லி இல்லத்தில் தலைமைச் செயலாள ருக்கு நிகரான பதவி வகித்து வந்தார்.  இவர் கூடுதல் தலைமை செயலாளர் தகுதி உள்ள பணியில் இருந்து வந் தார். இந்தச் சூழலில் கடந்த 25ஆம் தேதி இவர் தன்னுடைய பதவியிலி ருந்து விருப்பு ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார். அத் துடன் அவர் தமிழ்நாடு முதலமைச் சர் மு..ஸ்டாலினுக்கு கடிதம் ஒன் றையும் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2023ஆம் ஆண்டு என்னுடைய பணிக் காலத்திற்கு பிறகு பஞ்சாப் செல்வதா அல்லது தற்போதே பதவி விலகுவதா என்ற குழப்பம் எனக்குள் இருந்து வந்தது. ஆனால் நீங்கள் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழ் மக் களுக்காக மற்றும் தமிழ் கலாச்சாரத் திற்காக செய்யும் செயல்கள் எனக்கு மிகவும் பிடித்தது. மேலும் உங்க ளுடைய செயல் எனக்குள் இருந்த குழப்பத்தை தெளிவு படுத்த முக்கிய காரணமாக அமைந்தது. உங்களு டைய பாதையில் சொந்த மக்க ளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது என்று குறிப்பிட்டு இருந்தார். இந் நிலையில், அவர் பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் பா... சார்பில் போட்டியிடுகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சரைப் பாராட்டிப் பேசி அரசியலில் இறங்கப் போகிறேன் என்று ஒருவர் கூறிய 2 மணி நேரத்தில் அவரைப் பிடித்து தனது கட்சியில் சேர்த்து அவரை தங்களது வேட்பாளராக அறிவித்து  வேட்பு மனு தாக்கல் செய்யவும் அவரை வற்புறுத்தியது பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

 நீண்டகாலமாக பாஜகவிற்காக களமாடி விவசாயிகள் போராட்டத் தில் பலத்த எதிர்ப்பை சந்தித்தும் பாஜகவை விட்டுகொடுக்காமல் பணியாற்றி வரும் பாஜகவினரை புறந்தள்ளிவிட்டு இதுநாள் வரை அரசுப்பணியில் இருந்த ஒருவரை இரண்டே மணி நேரத்தில் கட் சியில் சேர்த்து போட்டியிட வாய்ப் பும் கொடுத்தது பஞ்சாப் பாஜக வினரிடையே கட்சியின்மீது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment